பிக்பாஸ் நடிகருக்கு மலையாள திரையுலகில் கிடைத்த வாய்ப்பு

  • IndiaGlitz, [Saturday,November 11 2017]

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பலருக்கு நிகழ்ச்சி முடிந்த பின்னர் சினிமாவிலும் தொலைக்காட்சிகளிலும் வாய்ப்பு கிடைத்துள்ளது. ஓவியாவுக்கு 'முனி 3', ஆரவ்வுக்கு  இயக்குனர் சரவணன் இயக்கும் படம், ஹரிஷ் கல்யாண்-ரைசா இணைந்து நடிக்கும் ஒரு படம், ஹரிஷ் கல்யாணுகு சிம்பு இசையில் பாட வாய்ப்பு, ஜூலிக்கு தொலைக்காட்சி தொகுப்பாளர் பணி என பிக்பாஸ் பங்கேற்பாளர்கள் பலருக்கு நல்ல வாய்ப்புகள் கிடைத்துள்ளது.

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதி வரை வந்த நடிகர் கணேஷ் வெங்கட்ராமனுக்கு தற்போது ஒரு முக்கிய திரைப்படம் வாய்ப்பு கிடைத்துள்ளது. ஏற்கனவே கணேஷ் வெங்கட்ராமன் ஹீரோ உள்பட பல வேடங்களில் நடித்தவர் என்றாலும் தற்போது அவர் மலையாள திரையுலகில் நடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.

பிரித்விராஜ் நடிக்கும் 'மை ஸ்டோரி' என்ற படத்தில் கணேஷ் வெங்கட்ராமன் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாகவும், இந்த வேடம் அவருக்கு மலையாள திரையுலகில் திருப்புமுனையை கொடுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கணேஷ் ஏற்கனவே அமிதாப்பச்சன், மோகன்லால் நடித்த 'காந்தஹார்' என்ற மலையாள படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

சென்னை திரையரங்கில் ரசிகர்களுடன் 'அறம்' பார்த்த நயன்தாரா

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த 'அறம்' திரைப்படம் நேற்று வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

மலேசியாவில் நட்சத்திர கலைவிழா: கமல், ரஜினி கலந்து கொள்கின்றனர்.

தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்கள் இணைந்து, வரும் 2018 ஆம் ஆண்டு ஜனவரி 6ஆம் தேதி நட்சத்திர விழா ஒன்றை மலேசியாவில் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

சிம்புவை எதிர்த்து பாஜக போராட்டமா? திடீர் போலீஸ் பாதுகாப்பு

சமீபத்தில் சிம்பு பண மதிப்பிழப்பு குறித்த பாடல் ஒன்றை வெளியிட்டார் என்பது அனைவரும் தெரிந்ததே. 'தட்றோம் தூக்றோம்' என்று தொடங்கும் இந்த பாடலில் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் ஏற்பட்ட

பத்மாவதி' படத்திற்கு துபாயில் இருந்து நிதி வந்ததா? சுப்பிரமணியன் சுவாமி குற்றச்சாட்டுக்கு படக்குழுவினர் பதில்

ரஜபுத்திர ராணி பத்மாவதி கேரக்டரில் தீபிகா படுகோனே நடித்துள்ள 'பத்மாவதி' திரைப்படம் வரும் டிசம்பர் 1ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்திற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.

அந்த குடும்பத்தில் நானும் ஒரு அங்கம்: மம்தாவுக்கு நன்றி கூறிய கமல்

கொல்கத்தாவில் நடைபெறும் 23வது சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொள்ள நேற்று உலக நாயகன் கமல்ஹாசன் சென்னையில் இருந்து கொல்கத்தாவுக்கு சென்றார்.