என் வாழ்க்கையில் ஏற்பட்ட மிகப்பெரிய வெற்றிடம்: கணேஷ் வெங்கட்ராமன் மனைவியின் சோகப்பதிவு
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவர் கணேஷ் வெங்கட்ராமன் என்பதும் இவர் ’அபியும் நானும்’ என்ற படத்தில் அறிமுகமாகி அதன் பின் கமல்ஹாசனின் ’உன்னைப்போல் ஒருவன்’ உள்பட பல திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது இவருக்கும் நிஷா என்ற சீரியல் நடிகையுடன் திருமணம் ஆனது என்பதும் திருமணமாகி 10 ஆண்டுகள் கழித்து இந்த தம்பதிக்கு சமீபத்தில் தான் பெண் குழந்தை பிறந்தது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் கணேஷ் வெங்கட்ராமன் மனைவி நிஷா தனது சமூக வலைத்தளத்தில் சோகமான ஒரு பதிவை பதிவு செய்துள்ளார். தன்னுடைய பாட்டி கமலா எதிர்பாராத வகையில் காலமாகி விட்டதாகவும் அவருடைய இழப்பு தனக்கு ஈடுசெய்ய முடியாத ஒரு வெற்றிடத்தை உண்டாக்கி உள்ளதாகவும் கூறியுள்ளார்.
என்னுடைய கமலா பாட்டி நன்றாக சமையல் செய்வார் என்றும் எப்போதும் எங்களை அரவணைத்துக் கொள்வார் என்றும் அவர் ஒரு நல்ல ஆசிரியர் மட்டுமின்றி நல்ல நகைச்சுவையாளராகவும், சிறந்த தோழியாகவும் இருந்தார் என்றும் அவருடைய ஆன்மா அமைதி ஆகட்டும் என்று சோகத்துடன் பதிவு செய்துள்ளார். இதனை அடுத்து ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com