27 வருடங்களுக்கு பின் ரீஎண்ட்ரி ஆகும் இயக்குனரின் படத்தில் பிக்பாஸ் நடிகர்!

  • IndiaGlitz, [Sunday,September 08 2019]

கடந்த 1987ஆம் ஆண்டு அமலா நடித்த ‘கவிதை பாட நேரமில்லை’ மற்றும் 1992 ஆம் ஆண்டு ‘மாதங்கள் ஏழு’ ஆகிய படங்களை இயக்கியவர் இயக்குனர் யூகிசேது. அதன்பின் அவர் விஜயகாந்தின் ‘ரமணா’, கமல்ஹாசனின் ‘பஞ்ச தந்திரம் போன்ற படங்களில் நடித்தாலும் படங்கள் இயக்கவில்லை.

இந்த நிலையில் 27 வருடங்கள் கழித்து மீண்டும் ஒரு படத்தை இயக்கவுள்ளார் யூகிசேது. இந்த படத்தில் பிக்பாஸ் முதல் சீசனின் போட்டியாளரும் நடிகருமான கணேஷ் வெங்கட்ராமன் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார். இதனை கணேஷ் வெங்கட்ராமன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் புகைப்படத்துடன் உறுதி செய்துள்ளார்.

லண்டனில் படமாக்கப்படவுள்ள இந்த படத்தின் லொகேஷன் பார்க்கும் பணிகள் நடந்து வருவதாகவும், விரைவில் இந்த படத்தின் முழு தகவல்களுடன் கூடிய அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறியுள்ள கணேஷ், ’யூகிசேதுவின் காமெடி கலந்த திரைக்கதை தன்னை மிகவும் கவர்ந்ததாகவும், அவருடன் பணிபுரிவது தனக்கு ஒரு நல்ல அனுபவமாக இருக்கும் என கருதுவதாகவும் தெரிவித்துள்ளார்.
 

More News

'பொன்னியின் செல்வன்' பாடல்களில் வைரமுத்து செய்யப்போகும் புதுமை!

கல்கி எழுதிய காலத்தால் அழியாத காவிய நாவலான 'பொன்னியின் செல்வன்', மணிரத்னம் அவர்களால் இரண்டு பாகங்களாக திரைப்படமாகவுள்ளது.

எங்களுக்கு ஊக்கம் அளித்து உள்ளீர்கள்: இஸ்ரோவுக்கு நாசா பாராட்டு!

நிலாவை இன்னும் சில நாடுகள் பூமியில் இருந்து அண்ணாந்து மட்டுமே பார்த்து கொண்டிருக்கும் நிலையில் இந்திய விஞ்ஞானிகளின் சீரிய முயற்சியால் நிலாவிற்கு மிக அருகில் அதாவது

மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத் மலானி காலமானார்!

இந்தியாவின் மூத்த வழக்கறிஞரும் முன்னாள் சட்டத்துறை அமைச்சருமான ராம் ஜெத்மலானி உடல்நலக்குறைவு காரணமாக இன்று டெல்லியில் காலமானார்.அவருக்கு வயது 95.

வனிதாவை செமையாய் கலாய்க்கும் கமல்!

பிக்பாஸ் வீட்டில் வனிதா பேச ஆரம்பித்துவிட்டால் அவர் பேசி முடிக்கும் வரை வேறு யாரும் பேச முடியாது. யாராவது பேச முற்பட்டாலும் 'ஒன் மினிட்', 'நான் என்ன சொல்ல வர்ரேன்னா'

சேரன் வெளியேற்றமா? சீக்ரெட் அறையா?

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் நாமினேஷன் பட்டியலில் உள்ள ஐவரில் சேரனுக்கு குறைவான வாக்குகள் கிடைத்திருந்ததால் அவர் வெளியேற வாய்ப்பு இருந்ததாக வந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.