கணேஷை கார்னர் செய்யும் பிக்பாஸ் பங்கேற்பாளர்கள்

  • IndiaGlitz, [Tuesday,August 08 2017]

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் ஆரம்பத்தில் இருந்தே ஒரு ஃபார்முலாவை கடை பிடித்து வருகின்றனர். யாராவது ஒருத்தரை குறி வைத்து அவருக்கு அதிகபட்ச டார்ச்சர் கொடுத்து அவராகவே வெளியேறும் வகையில் செய்வது.

இதற்கு முதல் பலி பரணி, இரண்டாவது பலி ஓவியா. இந்த நிலையில் பிக்பாஸ் பங்கேற்பாளர்களின் அடுத்த குறியாக கணேஷ் சிக்கியுள்ளார். கணேஷ் மற்றவர்களை விட அதிகம் சாப்பிடுவதை இதுவரை குறைந்தபட்சம் நூறு தடவை சொல்லி காண்பித்திருப்பார்கள். குறிப்பாக வையாபுரிக்கு கணேஷ் மீதுதான் ஒரு கண்ணாக உள்ளது.

இந்த நிலையில் இன்றைய புரமோவில் கணேஷ் சாப்பிடுவதை குறித்து தான் அனைவரும் பேசி கொள்கின்றனர். கணேஷ் சாப்பிடுவதை கேலி செய்யும் சினேகன் 'இவர் பரணியின் இன்னொரு வெர்ஷன் என்றும், இவரை கையை காலை கட்டி அனைவரும் சேர்ந்து வீட்டுக்கு வெளியே தூக்கி போட வேண்டும் என்றும் சொல்கிறார். எனவே இந்த வாரம் கணேஷ் குறைந்த ஓட்டு வாங்கி வெளியே சென்றால் தப்பித்தார். இல்லையெனில் அடுத்த வாரம் முதல் அதிக டார்ச்சரை எதிர்கொள்ள வேண்டிய நிலை இருக்கும்.