ஆறு வருடங்களுக்கு பின் மீண்டும் அபியுடன் இணையும் கணேஷ்?
- IndiaGlitz, [Tuesday,July 21 2015]
கடந்த பத்து ஆண்டுகளாக தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் த்ரிஷாவுக்கு பெரும்புகழ் தேடித்தந்த படங்களில் ஒன்று 'அபியும் நானும்'. பிரகாஷ் ராஜுக்கு மகளாக த்ரிஷா சிறப்பாக நடித்திருந்த இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக கணேஷ் வெங்கட்ராமன் நடித்திருந்தார். மிகவும் பொருத்தமான ஜோடி என்று பேசப்பட்ட இந்த ஜோடி மீண்டும் ஆறு வருடங்கள் கழித்து இணையவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
த்ரிஷாவின் மேனேஜர் கிரிதரன் தயாரிக்கவிருக்கும் திகில் படம் ஒன்று தமிழ் மற்றும் தெலுங்கில் தயாரிக்கப்படவுள்ளது. த்ரிஷா முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படத்தில் த்ரிஷாவுக்கு ஜோடியாக நடிக்க கணேஷ் வெங்கட்ராமனிடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு ஒப்பந்தம் செய்யப்படும் நிலையில் இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
இதுகுறித்து கணேஷ் வெங்கட்ராமன் கூறும்போது, 'அபியும் நானும்' படத்திற்கு பின்னர் மீண்டும் த்ரிஷாவுடன் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவது உண்மைதான். இன்னும் சில நாட்களில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கின்றேன்' என்று கூறியுள்ளார். இந்த படத்தை கோவி என்பவர் இயக்கவுள்ளார். இவர் பிரபல தெலுங்கு இயக்குனர் சுரேந்திர ரெட்டியிடம் உதவியாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.