சிலை போரில் சிக்கிய தமிழகம்-கேரளா! காந்தி சிலையும் தப்பவில்லை
Send us your feedback to audioarticles@vaarta.com
திரிபுரா மாநிலத்தில் கடந்த 25 ஆண்டுகளாக ஆட்சி புரிந்து வந்த கம்யூனிஸ்ட் கட்சியை வீழ்த்திய பாஜக, அந்த சந்தோஷத்தில் அங்குள்ள லெனின் சிலையை உடைத்தெரிந்தது. இதன் தாக்கம் எச்.ராஜாவின் ஃபேஸ்புக் பக்கத்தின் புண்ணியத்தில் தமிழகத்திலும் வெடித்தது
தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக பெரியார் சிலைகள் தாக்கப்பட்டு வருவதால் தற்போது சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டுமின்றி உத்தப்பிரதேசத்தில் அம்பேத்கர் சிலை, கொல்கத்தாவில் பாஜகவின் தாய் அமைப்பான ஜனசங்க நிறுவனர் சியாமா பிரசாத் முகர்ஜி சிலைகள் என நாடு முழுவதும் சிலை போர் நடந்து வருகிறது.
இந்த சிலைப்போர் தற்போது கேரளாவிலும் பரவிவிட்டது. கேரளாவில் உள்ள கண்ணூர் என்ற பகுதியில் இருந்த மகாத்மா காந்தி சிலை சேதப்படுத்தப்பட்டிருப்பதாகவும், இதனால் அந்த பகுதியில் பதட்டம் ஏற்பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
தமிழகம் உள்பட இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் தீர்க்க வேண்டிய பிரச்சனைகள் எத்தனையோ இருக்கும்போது ஒருசில அரசியல்வாதிகளின் தூண்டுதலினால் ஏற்பட்டுள்ள இந்த சிலைப்போரை நிறுத்த வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments