அவனுக்கு மரணம் இல்ல.. அவனால தான் மரணம்.. அமிதாப் பச்சனின் 'கண்பத்' டிரைலர்
Send us your feedback to audioarticles@vaarta.com
அமிதாப் பச்சன் மற்றும் டைகர் ஷெராஃப் முக்கிய வேடத்தில் நடித்த ‘கண்பத்’ என்ற திரைப்படத்தின் டீசர் கடந்த செப்டம்பர் மாதம் வெளியான நிலையில் தற்போது ட்ரெய்லர் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
இரண்டு நிமிடங்களுக்கு மேல் இருக்கும் இந்த ட்ரைலரில் அதிரடி ஆக்ஷன் காட்சிகள், ரொமான்ஸ் காட்சிகள் என ஒரு கமர்ஷியல் வெற்றி படத்திற்கு தேவையான அனைத்து அம்சங்களும் உள்ளன.
மேலும் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள பஞ்ச் வசனங்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக ’நாங்க எப்ப ரொம்ப பயப்படுறோமோ, அப்ப ரொம்ப பயங்கரமா அடிப்போம்’. ’இதுதான் கடைசி வார்னிங், என்னால உயிரை கொடுக்கவும் முடியும் ,உயிரை எடுக்கவும் முடியும்’ ’நாங்க உருவாக்கின விளையாட்டு பணக்காரங்க பறிச்சுக்கிட்டாங்க’ ’தனக்காக போராடுறவன் ஹீரோ இல்ல, தன்ன நம்புறவங்களுக்கு போராடுறவன் தான் ஹீரோ’ போன்ற பஞ்ச் வசனங்கள் வரவேற்பை பெற்றுள்ளது.
அமிதாப்பச்சன், டைகர் ஷெராப், கீர்த்திசனான் உள்ளிட்டோர் நடித்த இந்த படத்தை விகாஸ் பாஹி என்பவர் இயக்க உள்ளார். இந்த படம் அக்டோபர் 20ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments