ஐபிஎல் மேட்சில் கைவைத்த தாலிபான்கள்… காரணத்தைக் கேட்டு அதிர்ந்துபோன ரசிகர்கள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஆப்கானிஸ்தான் தொலைக்காட்சிகளில் சர்வதேச கிரிக்கெட் லீக் தொடரான ஐபிஎல் போட்டியை ஒளிபரப்பக் கூடாது என்று தாலிபான்கள் தற்போது தடைவிதித்து உள்ளனர். ஆப்கானிஸ்தான் வீரர்கள் பலரும் விளையாடிவரும் இந்த ஐபிஎல் போட்டியை ஒளிபரப்ப தடைவிதித்துள்ளதால் அந்நாட்டு ரசிகர்கள் கடும் அதிருப்தி அடைந்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
காபூலை தாலிபான்கள் கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி கைப்பற்றிய உடன் ஒட்டுமொத்த ஆப்கனும் அவர்கள் வசம் சென்றுவிட்டது. இதையடுத்து பெண்களுக்கான கட்டுப்பாடுகளை தற்போது படிப்படியாக அந்நாட்டில் தாலிபான்கள் அமல்படுத்தி வருகின்றனர். மேலும் நாடாளுமன்றத்தில் இருந்த பெண்கள்நல அமைப்பு வாரியத்தையும் காலி செய்துவிட்டனர். அதோடு நாடு முழுக்கவே இருபாலர் கல்விமுறைக்கு தடைவிதிக்கப்பட்டு உள்ளது.
மேலும் பெண்கள் அமைச்சர் பதவிக்கு தகுதியானவர்கள் இல்லை என்பதை தாலிபான்கள் அமைப்பின் செய்தி தொடர்பாளர் சயீத் செக்ரூல்லா ஹாஷிமி தெளிவுப்படுத்தி உள்ளார். இதனால் பெண்களுக்கான அனைத்து உரிமைகளும் பறிக்கப்பட்டு இருக்கிறது.
இந்நிலையில் ஐபிஎல் போட்டிகளில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்பதற்கு ஒப்புதல் அளித்த தாலிபான்கள் அந்த போட்டியை தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்ப தடைவிதித்து உள்ளனர். காரணம் ஐபிஎல் போட்டிகளை நேரடியாகக் காண்பதற்கு பெண்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் ஐபிஎல் போட்டி நடைபெறும் மைதானங்களில் பெண்கள் பலரும் பங்கேற்று இருப்பர். அதோடு நடன மங்கையர்களும் இந்த போட்டிகளில் கலந்து கொண்டு வீரர்களை உற்சாகப்படுத்துவர்.
இதுபோன்ற விஷயங்களை ஆப்கானிஸ்தான் மக்கள் பார்க்கக் கூடாது என்பதற்காகவே ஐபிஎல் போட்டிகளை அந்நாட்டில் ஒளிபரப்ப தாலிபான்கள் தடைசெய்து இருக்கிறார்களாம். இந்தக் காரணத்தைக் கேட்ட கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் கடும் அதிருப்தியை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் 400 விளையாட்டுகளுக்கு அனுமதி அளித்துள்ள தாலிபான்கள் அவற்றில் பெண்கள் பங்கேற்கலாமா? என்பதை இதுவரை தெளிவுப்படுத்த வில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதோடு பெண்கள் கிரிக்கெட் அணிக்கு தாலிபான்கள் சமீபத்தில் தடை விதித்து இருக்கின்றனர். இதனால் ஐசிசி உறுப்பினர் பதவியில் இருந்து ஆப்கானிஸ்தானை விலக்கிவிட வேண்டும் என்பது போன்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. மேலும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருந்த நிலையில் அந்தச் சுற்றுப்பயணத்தை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ரத்து செய்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout