கேம் சேஞ்சர் பட முன் வெளியீட்டு நிகழ்வில் ராம்சரண் - சுகுமார் கூட்டணி.. சூப்பர் அறிவிப்பு..!

  • IndiaGlitz, [Saturday,December 14 2024]

கேம் சேஞ்சர் பட முன் வெளியீட்டு நிகழ்வில், பிளாக்பஸ்டர் கூட்டணி ராம்சரண் - சுகுமார் ஒன்றாக தோன்றவுள்ளனர் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

குளோபல் ஸ்டார் ராம் சரண், பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கருடன், கேம் சேஞ்சர் படத்திற்காக முதல் முறையாக இணைந்துள்ளார். இப்படத்தின் புரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இம்மாதம் 21ஆம் தேதி அமெரிக்காவின் டல்லாஸ் நகரில், வெளியீட்டிற்கு முந்தைய நிகழ்ச்சியை நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

இந்த முன் வெளியீட்டு நிகழ்ச்சியில், மாஸ்டர் ஃபிலிமேக்கர் சுகுமார், சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். சுகுமார் மற்றும் ராம் சரண் கூட்டணி கடந்த காலத்தில் “ரங்கஸ்தலம்” எனும் கிளாசிக் பிளாக்பஸ்டரை வழங்கினார்கள். கிராமப் பின்னணியில் உருவாகியிருந்த, இந்த ஆக்சன் படம், அனைத்து தரப்பிலும் பெரும் பாராட்டுக்களை பெற்றது. இந்தக் கூட்டணி விரைவில் தங்கள் இரண்டாவது படமான RC 17 க்காக இணையவுள்ளனர். இப்போதே இது இந்திய சினிமாவில் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்றாகியுள்ளது.

“கேம் சேஞ்சர்” அமெரிக்காவில் பிரமாண்டமான முன் வெளியீட்டு நிகழ்வைக் நடத்தும் முதல் இந்தியத் திரைப்படமாகும். இந்த முன் வெளியீட்டு நிகழ்வில் ஏராளமான ரசிகர்களுடன், படத்தின் நடிகர்கள் மற்றும் குழுவினர் கலந்து கொள்ளவுள்ளனர்.

கேம் சேஞ்சர் அரசியல் பின்னணியை மையமாகக் கொண்ட அதிரடி ஆக்சன் திரைப்படமாகும். இப்படத்தில் ராம் சரண் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். ஒரு பாத்திரத்தில் ஐஏஎஸ் அதிகாரியாகவும், மற்றொன்றில் சமூக அக்கறை கொண்ட இளைஞனாகவும் தோன்றுகிறார்.

இப்படத்தில் கியாரா அத்வானி கதாநாயகியாக நடித்துள்ளார். ஜெயராம், நவீன் சந்திரா, எஸ்.ஜே.சூர்யா, அஞ்சலி, பிரகாஷ் ராஜ், ஸ்ரீகாந்த் மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

முன்னணி இசையமைப்பாளர் தமன் எஸ் இசையமைத்துள்ளார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ், தில் ராஜு புரொடக்ஷன்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் ஆகியவற்றின் சார்பில் தில் ராஜு மற்றும் சிரிஷ் இப்படத்தை தயாரித்துள்ளனர். கேம் சேஞ்சர் ஆடியோவை சரிகம நிறுவனம் வெளியிடுகிறது.

கேம் சேஞ்சர் திரைப்படம் ஜனவரி 10, 2025 அன்று தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் பிரமாண்டமாக வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. தமிழில் எஸ்.வி.சி மற்றும் ஆதித்யராம் மூவிஸ் தயாரித்துள்ள இப்படத்தை ஏஏ பிலிம்ஸ் இந்தியில் வெளியிடவுள்ளது. வட அமெரிக்காவில், ஷ்லோகா என்டர்டெயின்மென்ட் மூலம் இந்தப் படம் மிகப்பெரிய அளவில் வெளியிடப்படவுள்ளது.

More News

ரஜினிக்கு ஜோடியாக நடித்த நடிகைக்கு குழந்தை.. பால் கொடுக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அறிவிப்பு..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜோடியாக நடித்த நடிகை தனக்கு குழந்தை பிறந்ததை உறுதிப்படுத்தி, குழந்தைக்கு பால் கொடுக்கும் புகைப்படத்தை பதிவிட்டு அறிவித்துள்ளார்.

நேற்றே ஜாமீன் கிடைத்தும் இரவு முழுவதும் சிறையில் இருந்த அல்லு அர்ஜுன்.. என்ன காரணம்?

பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நேற்று கைது செய்யப்பட்ட நிலையில், அவரை 14 நாட்களுக்கு காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில், அவருக்கு

கேப்டன் விஜயகாந்த் மகனை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்திய தவெக தலைவர் விஜய்.. என்ன நடந்தது?

கேப்டன் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் நேற்று தனது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில், அவருக்கு தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தொலைபேசி மூலம் பிறந்தநாள்

சனி பகவான் பற்றிய சில அரிய தகவல்கள் !!

ஆன்மீகக்ளிட்ஸ் சேனலில், ஜோதிட ஆய்வாளர் ராஜேந்திரன் அவர்கள், சனி பகவானைப் பற்றிய பல பொதுவான கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.

அல்லு அர்ஜூனனை சிறையில் அடைக்க  நீதிபதி உத்தரவு.. அதிர்ச்சியில் தெலுங்கு திரையுலகம்..!

'புஷ்பா 2' திரைப்படம் ரிலீஸான தியேட்டரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலால் உயிரிழந்த பெண் தொடர்பான வழக்கில், நடிகர் அல்லு அர்ஜுனுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் என நீதிபதி