தமிழ்நாட்டில் 'கேம் சேஞ்சர்' வெளியாவதில் சிக்கலா? என்ன நடந்தது?
- IndiaGlitz, [Monday,January 06 2025]
ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் தேஜா நடித்த ‘கேம் சேஞ்சர்’ திரைப்படம் வரும் 10ஆம் தேதி உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் வெளியாக இருக்கின்ற நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் இந்த படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பொங்கல் திருநாளில் கிட்டத்தட்ட அனைத்து படங்களும் வெளியானாலும், ஷங்கரின் ‘கேம் சேஞ்சர்’ படத்திற்கு தான் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. இந்த நிலையில், இந்த படத்தின் புரமோஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், ‘கேம் சேஞ்சர்’ திரைப்படத்தை தமிழ்நாட்டில் வெளியிட லைக்கா தயாரிப்பு நிறுவனம் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கமல்ஹாசன் நடிப்பில் சமீபத்தில் வெளியான இந்தியன் 2 திரைப்படம் எதிர்பார்த்த வசூலை பெறாத நிலையில், இந்தியன் 3 திரைப்படத்தை எடுத்து தராமல், ‘கேம் சேஞ்சர்’ செய்த திரைப்படத்தை தமிழகத்தில் வெளியிடக்கூடாது என லைக்கா நிறுவனம் தெரிவித்து வருவதாகவும், இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
ரிலீசுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் ‘கேம் சேஞ்சர்’ தயாரிப்பு நிறுவனம் செய்துள்ள நிலையில், கடைசி நேரத்தில் திடீரென லைக்கா நிறுவனம் பிரச்சனை செய்வதால் தமிழ்நாட்டில் மட்டும் இந்த படம் ரிலீஸ் ஆகுமா என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. இருப்பினும், சுமூகமான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, தமிழகம் முழுவதும் இந்த படம் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.