இனிமே தா ஆட்டமே இருக்கு… WHO வின் புது எச்சரிக்கை!!!
- IndiaGlitz, [Wednesday,July 01 2020]
கொரோனா வைரஸ் ஏற்டுத்திய தாக்கத்தால் உலகமே அரண்டு போயிருக்கிறது. இந்நிலையில் மிக மோசமான தாக்கம் இனிமேல்தான் நடக்கப் போகிறது என உலகச் சுகாதார நிறுவனம் மேலும் ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டு இருக்கிறது. கடந்த டிசம்பர் இறுதியில் கண்டுபிடிக்கப் பட்ட கொரோனா வைரஸ் தாக்கம் 6 மாதங்களில் உலகையே அதள பாதாளத்திற்கு தள்ளியிருக்கிறது. 1 கோடிக்கு மேற்பட்ட மக்கள் இந்நோய் தொற்றால் பாதிக்கப் பட்டுள்ளனர். உயிரிழப்புகள் 5 லட்சத்தைத் தாண்டியிருச்கிறது.
இந்நிலையில் WHO வின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் “நோய் தடுப்பு நடவடிக்கைகளில் உலக நாடுகளுக்கு இடையே ஒற்றுமை இல்லை” என கவலைத் தெரிவித்து உள்ளார். “தற்போது இருப்பதைக் காட்டிலும் மிக மோசமான பாதிப்பை உலக நாடுகள் இனிமேல் தான் சந்திக்கப் போகிறது” எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார். உலக நாடுகள் கொரோனா வைரஸை எதிர்த்து புரிந்துணர்வுடன் செயல்பட வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
தற்போது கொரோனா வைரஸ் பரவியது குறித்த ஆய்வுகள் முடிக்கிவிடப் பட்டுள்ளது எனவும் நோய்த்தாக்கத்தின் ஆரம்பத்தை குறித்து அறிந்து கொள்ள வேண்டியது அவசியம் எனவும் அவர் கூறியிருக்கிறார். நோய்த்தாக்கம் எங்கிருந்து தொடங்கியது என்பதை கண்டுபிடிப்பதன் மூலம் கொரோனா நோய்த்தொற்றுக்கு முடிவு கட்ட முடியும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார். இதற்காக சீனாவிற்கு ஆய்வாளர்கள் அனுப்பப் பட்டுள்ளனர் என்ற தகவலையும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.