கஜா புயல்: கவனிக்கப்படாமல் இருக்கும் கிராமங்கள்...

  • IndiaGlitz, [Tuesday,November 20 2018]

சமீபத்தில் டெல்டா மாவட்டங்களை தாக்கிய கஜா புயலால் மிகப்பெரிய சேதங்கள் ஏற்பட்டது என்பது சென்னை உள்பட மற்ற மாவட்ட மக்களுக்கு ஒரு செய்தி. ஆனால் தமிழகத்திற்கே சோறு போட்ட டெல்டா பகுதி மக்களில் பலர் இன்று உதவிக்கரமின்றி பெரும் துயரத்தில் உள்ளனர்.

சென்னையில் கடந்த 2015ஆம் ஆண்டு வெள்ளம் ஏற்பட்ட போது சென்னையின் மொத்த பகுதியும் மின்சாரம் இன்றி இருளில் மூழ்கியது. ஆனால் மின்னல் வேகத்தில் நடைபெற்ற மீட்புப்பணியால் மூன்றே நாட்களில் இயல்பு நிலை திரும்பிவிட்டது. அதேபோல் 2016ஆம் ஆண்டு வர்தா புயலின்போதும் சேதம் அதிகமானாலும் சில நாட்களில் சென்னை மீண்டுவிட்டது. ஆனால் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதியின் நிலைமை அவ்வாறு இல்லை.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட ஓரளவு பெரிய நகரங்களான தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை போன்ற நகரங்களில் மீட்புப்பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. ஆனால் கிராமப்பகுதி மற்றும் மீனவர்கள் அதிகம் வாழும் கடலோர பகுதிகளுக்கு இன்னும் மீட்புக்குழுவினர் செல்லவே முடியாத வகையில் உள்ளது. இங்கு மின்சாரம் கிடைக்க இன்னும் மூன்று அல்லது நான்கு வாரங்கள் ஆகலாம் என கூறப்படுகிறது.

சாலை முழுவதும் சாய்ந்த மரங்கள், சாய்ந்த மின்கம்பங்கள், வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் கிராம மக்கள், ஆயிரக்கணக்கான கால்நடைகள் உயிரிழந்து அவைகளை சரியான முறையில் புதைக்காததால் ஏற்படும் தொற்றுநோய், என கிராம பகுதிகளில் நிலைமை மிக மோசமாக உள்ளது.

சென்னை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து செல்லும் நிவாரண பொருட்கள் சாலை ஓரத்தில் உள்ள மக்களும் நகர்ப்பகுதி மக்களையும் சென்றடைந்துவிடுகிறது. ஆனால் உள்ளே உள்ள கிராம பகுதிகளில் உணவு, தண்ணீர் வசதியின்றி பெரும்பாலான மக்கள் இருப்பதையும் நிவாரண பொருட்களை கொண்டு செல்பவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

சென்னையில், கேரளாவில் வெள்ளம் ஏற்பட்ட போது கோடி கோடியாக தமிழகத்தில் இருந்து மட்டுமின்றி இந்தியா முழுவதிலும் இருந்து கோடி கோடியாய் நிதியுதவிகள் குவிந்தது. கிட்டத்தட்ட அதற்கு ஈடான ஒரு இயற்கை பேரிடர்தான் தற்போது டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்டுள்ளது. இது மற்ற மாநில மக்களுக்கு புரிகிறதோ இல்லை, டெல்டா நமது தமிழக மக்களுக்கு சோறு போடும் பகுதி என்பதையாவது நினைவில் வைத்து உடனடியாக களமிறங்க வேண்டிய நேரம் இது.

அரசியல்வாதிகள் கஜா புயலை வைத்து அரசியல் செய்து கொண்டிருக்கின்றனர், திடீர் தமிழ் போராளிகள் இன்னும் ஒருவர் கூட இந்த பாதிப்பு குறித்து வாயை திறக்கவே இல்லை, நடிகைகளின் மீடூ குற்றச்சாட்டுக்களுக்கு கொடுத்த முக்கியத்துவத்தை கூட முக்கிய ஊடகங்கள் இதற்கு கொடுக்கவில்லை. எனவே இந்த நேரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி உதவி செய்யும் மனப்பான்மை உள்ளவர்கள் உடனடியாக களமிறங்க வேண்டிய நேரம். முடிந்தவரை தாராளமாக நிதியுதவி செய்வோம், முடிந்தவரை நேரில் நிவாரண பொருட்களை பாதிக்கப்பட்ட கிராம பகுதிக்கு கொண்டு செல்வோம்.

More News

கஜா புயல் நிவாரணத்திற்காக லைகா, ஷங்கர் கொடுத்த நிதியுதவி

சமீபத்தில் கஜா புயலினால் பாதிக்கபப்ட்ட டெல்டா மாவட்ட பகுதி மக்களுக்காக திரையுலகினர் தாராளமாக நிதியுதவி செய்து வருகின்றனர். மேலும் முக்கிய நடிகர்களின் ரசிகர்கள் க

நிவாரண பணியின்போது காயமடைந்த மின் ஊழியருக்கு அமைச்சர் செய்த உதவி

கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான மின்கம்பங்கள் கீழே சாய்ந்துவிட்டதால் பெரும்பாலான பகுதிகளில் மின்சார விநியோகம் பாதிக்கப்பட்டது.

கள்ளக்காதலனுடன் சேர்ந்து தோசைக்கல்லால் கணவரை கொன்ற மனைவி

சேலம் அருகே கள்ளக்காதலனுடன் இணைந்து கணவரை தோசைக்கல்லால் அடித்து கொன்ற பெண் கைது செய்யப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,

கஜா புயலினால் நாதியற்று தவிக்கும் கிராமங்கள்

வர்தா புயலில் சென்னை எப்படி தவித்ததோ அதே நிலை தான் இன்று புதுக்கோட்டைக்கு என தவறாக பதிவிட்டு விட்டேன்.

கஜா புயல் நிவாரண நிதியாக ரூ.25 லட்சம் கொடுத்த இன்னொரு நடிகர்

கஜா புயல் நிவாரண நிதியாக சிவகுமார் குடும்பத்தினர் ரூ.50 லட்சமும், நடிகர் விஜய்சேதுபதி ரூ.25 லட்சமும், நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.20 லட்சமும் நிவாரண நிதியாக கொடுத்துள்ளனர்.