பிக்பாஸ் நிகழ்ச்சியில் மேலும் ஒரு விஜய் டிவி பிரபலம்?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த 3 சீசன்களிலும் விஜய் டிவியில் பிரபலமானவர்கள் ஒருசிலர் போட்டியாளர்களாக இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கவின், பாலாஜி, போன்ற விஜய் டிவி பிரபலங்கள் ஏற்கனவே கடந்த சீசன்களில் போட்டியாளர்களாக இருந்த நிலையில் தற்போது நடைபெற உள்ள பிக்பாஸ் நான்காவது சீஸனிலும் விஜய் டிவி பிரபலங்கள் ஒருசிலர் போட்டியாளர்களாக பங்கேற்க இருப்பதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

அந்த வகையில் ஏற்கனவே வந்த தகவலின்படி விஜய் டிவியின் மூலம் பிரபலமடைந்த ரக்சன், ஆஜித் உள்ளிட்ட ஒருசிலர் போட்டியாளராக இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு விஜய் டிவி பிரபலம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர் என்று செய்திகள் வெளிவந்து வெளிவந்துள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பான டான்ஸ் ரியாலிட்டி ஷோவில் பங்கேற்று டைட்டில் பட்டம் வென்றவர் கேப்ரில்லா என்பது தெரிந்ததே. இவர்தான் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவர் என தெரிய வந்துள்ளது. மேலும் இவர் தனுஷின் ‘3’, ‘சரத்குமாரின் ‘சென்னையில் ஓர் நாள்’, சமுத்திரக்கனியின் ‘அப்பா’ மற்றும் ‘அப்பா 2’ ஆகிய படங்களில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.