சூர்யா-சுதா இணையும் படத்தின் இசையமைப்பாளர் குறித்த தகவல்

  • IndiaGlitz, [Monday,July 03 2017]

சூர்யா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கி வரும் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் இவ்வாரம் வெளியாகும் என்றும் இதனையடுத்து டீசர், பாடல்கள் அடுத்தடுத்து வெளியிடவும் படக்குழு திட்டமிட்டுள்ளது.

இந்த நிலையில் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தை அடுத்து 'இறுதிச்சுற்று' இயக்குனர் சுதா கொங்காரா இயக்கத்தில் சூர்யா ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகின. தற்போது இந்த படத்தின் இசையமைப்பாளர் குறித்த தகவல் வெளிவந்துள்ளது. இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த தகவல் உறுதி செய்யப்படும் பட்சத்தில் சூர்யாவின் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் முதன்முதலாக இசையமைக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்த அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளிவரவுள்ளதாகவும், இந்த படத்தின் மற்ற தகவல்களுடன் கூடிய அதிகார்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

More News

ஜிஎஸ்டி, கேளிக்கை வரி: மதன்கார்க்கியின் அதிரடி அறிவிப்பு

ஜூலை 1 முதல் நாடு முழுவதும் ஒரே வரி என்ற அறிவித்துதான் ஜிஎஸ்டி வரியை மத்திய அரசு அறிமுகம் செய்தது. ஆனால் ஒருசில மாநிலங்களில் ஜிஎஸ்டி வரி மட்டுமின்றி மாநில அரசின் வரியும் விதிக்கப்படுவதால் இரட்டை வரி செலுத்த வேண்டிய நிலை ஏற்படுகிறது....

புளுகுமூட்டை சினேகன், நாட்டாமை நமீதா! பட்டப்பெயர் வைத்து வெளியேறிய அனுயா

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நேற்று அனுயா வெளியேற்றப்பட்டார்...

'இவன் தந்திரன்' ஓப்பனிங் வசூல் விபரம்

கவுதம் கார்த்திக், ஆர்ஜே பாலாஜி நடிப்பில் ஆர்.கண்ணன் தயாரித்து இயக்கிய 'இவன் தந்திரன்' திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களின் பாசிட்டிவ் ரிசல்ட்டை பெற்றது. பொறியியல் கல்லூரி மாணவர்கள் நிலைமையை மிக அழகாக எடுத்து கூறியதால் கடந்த மூன்று நாட்களாக திரையரங்குகளில் மாணவர்கள் மற்றும் இளைஞர்க

'அதாகப்பட்டது மகாஜனங்களே' ஓப்பனிங் வசூல் எப்படி?

பிரபல நகைச்சுவை மற்றும் குணசித்திர நடிகர் தம்பிராமையாவின் மகன் உமாபதி ஹீரோவாக அறிமுகமாகியுள்ள 'அதாகப்பட்டது மகாஜனங்களே' திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியானது...

தமிழ் சினிமாவை காப்பாற்றுங்கள்: இயக்குனர் ஷங்கர் கோரிக்கை

தமிழ் திரையுலகம் கடந்த சில வருடங்களாகத்தான் லாபத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது. தயாரிப்பாளர்கள் ரூ.100 கோடிக்கும் மேல் செலவு செய்து பெரிய பட்ஜெட் படங்களை துணிச்சலுடன் தயாரிக்க ஆரம்பித்துள்ளனர்...