ஜி.வி.பிரகாஷின் 'தியாகம் செய்வோம் வா' முழு பாடலின் வரிகள்
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையில் அருண்காமராஜ் வரிகளில் இருவரும் இணைந்து பாடிய 'தியாகம் செய்வோம் வா' பாடல் சற்று முன்னர் இணையதளங்களில் வெளியாகியுள்ளது. உணர்ச்சி பெருக்குள்ள இந்த பாடலின் வரிகள் இதோ:
தியாகம்செய்வோம்வா
உறங்காதே தமிழா
இறங்காதே தமிழா
கலங்காதே தமிழா
கசங்காதே தமிழா
உறங்காதே தமிழா
இறங்காதே தமிழா
கலங்காதே தமிழா
கசங்காதே தமிழா
தியாகிகள் நாங்கள்
தமிழர்கள் நாங்கள்
அன்னியன் வந்தால்
அடக்குவோம் நாங்கள்
வளங்கள் கொண்டோம்
சுரண்டத்தானா?
சுகங்கள் எல்லாம்
மழுங்கத்தானா?
திட்டங்கள் என்ன
சட்டங்கள் என்ன
பலகோடி உயிரின்
பலியில் தானா?
சில லட்சம் பேர்கள்
சிறகினில் பறக்க
பலகோடி பேரின்
சிறகையா முறிக்க?
தியாகம் செய்வோம் வா
தியாகம் செய்வோம் வா தாயே
தியாகம் செய்வோம் வா
தியாகம் செய்வோம் வா
தியாகம் செய்வோம் வா தமிழா
தியாகம் செய்வோம் வா
உறங்காதே தமிழா
இறங்காதே தமிழா
கலங்காதே தமிழா
கசங்காதே தமிழா
கற்க கசடற கற்பவை கற்றபின்
துணிந்து நிற்க நமக்குத் தக
வதைகளை தடுத்திட
வரங்களை படைத்திட
இளமையின் இச்சைகள்
திசை திரும்புமடா
உனக்கென உழைத்திடும்
உணவினை படைத்திட
உழுபவன் தோள்களில்
வலு கூட்டிட வா
பிரிவினையை பிறர் வினையை
அறியாமை, அகவுணர்வை வேற்றுமையை
வேஷங்களை, தீச்சொல்லை
தீயவற்றை துறப்போம், மறப்போம்
தியாகம் செய்வோம் வா
தியாகம் செய்வோம் வா
தியாகம் செய்வோம் வா தாயே
தியாகம் செய்வோம் வா
தியாகம் செய்வோம் வா
தியாகம் செய்வோம் வா தமிழா
தியாகம் செய்வோம் வா
சொர்க்கத்தின் வாசலில்
சுரங்கத்தை போட்டுத்தான்
திக்கற்று மாறுமே
நெடுவாசல் போலவே
இதை மாற்ற நமக்கொரு
தருவாயில் இருக்கிறோம்
தருவாயும் தவறினால்
நரகத்தின் வாசலில்
தவிப்போமே நாமெல்லாம்
தமிழா....தமிழா
தியாகிகள் நாங்கள்
தமிழர்கள் நாங்கள்
அன்னியன் வந்தால்
அடக்குவோம் நாங்கள்
வளங்கள் கொண்டோம்
சுரண்டத்தானா?
சுகங்கள் எல்லாம்
மழுங்கத்தானா?
திட்டங்கள் என்ன
சட்டங்கள் என்ன
பலகோடி உயிரின்
பலியில் தானா?
சில லட்சம் பேர்கள்
சிறகினில் பறக்க
பலகோடி பேரின்
சிறகையா முறிக்க?
தவறான நீதி
தரும் எங்கள் பூமி
இருள் பாதை தேடி
இனிபோகும் கூடி
எதுவாசல் என்றே
தெரியாமல் நாளும்
திரிந்தோமே தமிழா
திசைமாறு தமிழா
தியாகம் செய்வோம் வா
தியாகம் செய்வோம் வா தாயே
தியாகம் செய்வோம் வா
தியாகம் செய்வோம் வா
தியாகம் செய்வோம் வா தமிழா
தியாகம் செய்வோம் வா
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments