ஜி.வி.பிரகாஷின் புத்தாண்டு விருந்து குறித்த முக்கிய தகவல்

  • IndiaGlitz, [Friday,November 25 2016]

ஜி.வி.பிரகாஷ், நடிப்பில் எம்.ராஜேஷ் இயக்கிய 'கடவுள் இருக்குறான் குமாரு' திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கின்றது. இந்நிலையில் ஜி.வி.பிரகாஷ் நடித்து வரும் இன்னொரு படமான 'அடங்காதே' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ் தேதி குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.
சண்முகம் முத்துச்சாமி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், சுரபி, சரத்குமார், மந்த்ராபேடி, தம்பிராமையா உள்பட பலர் நடித்து வரும் 'அடங்காதே' படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வரும் ஆங்கில புத்தாண்டு தினமான ஜனவரி 1-ல் வெளியாகவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த ஃபர்ஸ்ட்லுக் அவருடைய ரசிகர்களுக்கு புத்தாண்டு விருந்தாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
மேலும் ஜி.வி.பிரகாஷ் நடித்து முடித்துள்ள 'புரூஸ்லீ' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. மேலும் அவர் '4G', 'சர்வம் தலமயம்' ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.