ஜிவி பிரகாஷின் அடுத்த ஆங்கில ஆல்பம்: மீண்டும் கைகொடுக்கும் தனுஷ்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல நடிகர் மற்றும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷின் சர்வதேச ஆல்பம் சமீபத்தில் வெளிவந்தது என்பதும் ’கோல்ட் நைட்ஸ்’ என்ற பெயரில் வெளியான அந்த ஆல்பம் மிகப்பெரிய அளவில் வைரலானது என்பதும் தெரிந்ததே. ஜிவி பிரகாஷ் மற்றும் ஜூலியா கர்தா ஆகிய இருவரும் இணைந்து பாடிய அந்தப் பாடல் உலக அளவில் ஹிட்டானது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ’கோல்டு நைட்ஸ்’ பாடலை அடுத்து தற்போது ’கிரையிங் நைட்’ என்ற ஆங்கில ஆல்பத்தை ஜிவி பிரகாஷ் கம்போஸ் செய்துள்ளார். முந்தைய ஆங்கில ஆல்பத்தில் இணைந்த ஜூலியா கர்தா இந்த ஆல்பத்திலும் ஜிவி பிரகாஷ் உடன் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் ஜிவி பிரகாஷின் முந்தைய ஆங்கில ஆல்பத்தை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட நடிகர் தனுஷ், இந்த ஆல்பத்தை நவம்பர் 19ஆம் தேதி மாலை ரிலீஸ் செய்யவுள்ளார். இந்த தகவலை ஜீவி பிரகாஷ் தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஜிவி பிரகாஷ் தற்போது சுமார் 10 படங்களில் நடித்து வருகிறார் என்பதும் ‘தலைவி’ உள்பட ஒருசில படங்களுக்கு இசையமைத்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
My next English single #CryingOut from the album cold nights will be released by our @dhanushkraja on November 19th evening .... am super excited about this ... @JuliaGartha @oklistenin @orchtweets @proyuvraaj @gdinesh111 @venkystudios pic.twitter.com/V1q0BxAdEL
— G.V.Prakash Kumar (@gvprakash) November 12, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments