இண்டர்நேஷனல் சூப்பர் ஸ்டாருக்கு மாறிய ஜி.வி.பிரகாஷ்
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல இளம் இசையமைப்பாளரும், நடிகராகவும் விளங்கி வரும் ஜி.வி.பிரகாஷ், தற்போது பென்சில், த்ரிஷா இல்லைனா நயன்தாரா, ஆகிய படங்களில் நடித்து கொண்டிருக்கின்றார். இரு படங்களும் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் 'திருடன் போலீஸ்' படத்தயாரிப்பு நிறுவனம் கெனன்யா பிலிம்ஸ் தயாரிக்கும் அடுத்த படத்தில் நடிக்க சமீபத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். இந்த படத்திற்கு 'பாட்ஷா என்கிற ஆண்டனி' என்ற டைட்டில் வைக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த டைட்டிலுக்கு ஒரிஜினல் 'பாட்ஷா' பட தயாரிப்பு நிறுவனம் சத்யா மூவீஸ் அனுமதி கொடுக்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. விரைவில் பாட்ஷா 2' தயாரிக்கும் திட்டமிருப்பதால் இந்த டைட்டிலுக்கு அனுமதி கிடைக்கவில்லை என கூறப்படுகிறது
ஆனால் இதற்காக படக்குழுவினர் அப்செட் ஆகவில்லை. இந்திய சூப்பர் ஸ்டாரின் டைட்டில் இல்லாவிட்டால் பரவாயில்லை. இண்டர்நேஷனல் சூப்பர் ஸ்டாரை தேர்வு செய்வோம் என முடிவு செய்து தற்போது அந்த படத்திற்கு 'புரூஸ்லீ' என்ற டைட்டில் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது.
தேசிய விருது பெற்ற பாண்டிராஜின் உதவியாளர் பிரசாந்த் பாண்டியராஜன் இயக்கவுள்ள இந்த படம் த்ரில்லர் மற்றும் காமெடி கதையம்சம் கொண்டது என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக நடிக்க ஒரு பெரிய நடிகையை ஒப்பந்தம் செய்யவிருப்பதாக இயக்குனர் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments