விவசாயிகளுக்கு என தனி தொண்டு நிறுவனம். பிரபல இசையமைப்பாளரின் புதிய முயற்சி

  • IndiaGlitz, [Wednesday,January 25 2017]

மாணவர்கள், இளைஞர்கள் நடத்திய ஜல்லிக்கட்டு பிரச்சனைக்கு தனது முழு ஆதரவை கொடுத்தவர் பிரபல இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் என்பது அனைவரும் அறிந்ததே. தற்போது ஜல்லிக்கட்டு பிரச்சனை முடிவுக்கு வந்ததை அடுத்து விவசாயிகள் பிரச்சனையை கையில் எடுத்துள்ளார் ஜி.வி.பிரகாஷ்.
விவசாயிகள் பிரச்சனையை வெறும் பேச்சாக மட்டுமின்றி அவர்களுக்கு உண்மையாகவே உதவும் நோக்கத்துடன் ஒரு தொண்டு நிறுவனம் ஒன்றை புதிய தொடங்கவுள்ளாராம் ஜி.வி.பிரகாஷ். இந்த தொண்டு நிறுவனத்தில் தன்னுடைய அடுத்த படத்தின் முழு சம்பளத்தையும் அவர் கொடுக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. தொண்டு நிறுவனத்திற்கான ஆரம்பகட்ட அரசாங்க வழிமுறைகளை அவர் ஆரம்பித்துவிட்டதாகவும், விரைவில் இதுகுறித்த தகவல்களை அவர் முறையாக வெளியிடுவார் என்றும் கூறப்படுகிறது.
ஏற்கனவே ஜல்லிக்கட்டுக்காக ஜி.வி.பிரகாஷ் இயற்றிய 'கொம்பு வச்ச சிங்கமடா' பாடலின் வருமானம் முழுவதையும் நலிந்த விவசாயிகளுக்கு வழங்கவுள்ளதாக அவர் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.