காவல்துறையில் ஜி.வி.பிரகாஷ் கொடுத்த திடீர் புகார்
- IndiaGlitz, [Sunday,May 15 2016]
திரையுலகிற்கு பெரிய தலைவலியாக இருக்கும் ஒரே பிரச்சனை திருட்டு டிவிடி. இந்த பிரச்சனைக்கு எப்படி முடிவு காண்பது என்று தெரியாமல் திரையுலகினர் திண்டாடி வருகின்றனர். ரிலீஸ் தினத்தன்றே மார்க்கெட்டுக்களில் அந்த படத்தின் திருட்டு டிவிடி கிடைப்பதும் ஒருசில இணையதளங்களில் பதிவு செய்யப்பட்டிருப்பதும் வழக்கமான நிகழ்ச்சியாக மாறி வருகின்றது.
இந்நிலையில் நேற்று முன் தினம் வெளியான ஜி.வி.பிரகாஷின் 'பென்சில்' படத்தின் திருட்டு டிவிடிக்கள் வெளிவந்துகொண்டிருப்பதாக வந்த தகவலை அடுத்து சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம் இந்த படத்தின் தயாரிப்பாளர் ஒரு புகார் கடிதம் எழுதி கொடுத்துள்ளார். அப்போது ஜி.வி.பிரகாஷூம் உடனிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருடைய புகார் கடிதத்தில் கூறியிருப்பதாவது:
எங்கள் நிறுவனம் தயாரித்து ஜி.வி.பிரகாஷ், ஸ்ரீதிவ்யா நடிப்பில் கடந்த வெள்ளியன்று (13.05.2016) வெளியான 'பென்சில்' திரைப்படத்தின் திருட்டு விசிடி இன்று (14.05.2016) இணையதளங்களில் வெளியாகியுள்ளது. இதனால் எங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே தயவு கூர்ந்து இடஹி தடுக்க தக்க ஆவணம் செய்யுமாறு மிக்க பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன். சில இணையதளத்தில் எங்கள் படம் வெளியாகியுள்ளது.
இவ்வாறு அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.