ஜி.வி.பிரகாஷின் அடுத்த படத்தை இயக்கும் வெற்றி பட இயக்குனர்

  • IndiaGlitz, [Wednesday,August 23 2017]

கோலிவுட் திரையுலகில் அதிக படங்களில் நடித்து கொண்டிருக்கும் நடிகர்களில் ஒருவர் ஜி.வி.பிரகாஷ். நடிப்பு மட்டுமின்றி இசைத்துறையிலும் ஈடுபட்டு வரும் ஜி.வி.பிரகாஷ் ஏற்கனவே 'அடங்காதே', '4G', 'ஐங்கரன்', 'நாச்சியார்', 'செம', '100% காதல்', போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் 'ஈரம்', 'ஆறுவது சினம்' 'குற்றம் 23' போன்ற வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் அறிவழகன் இயக்கும் அடுத்த படத்தில் நடிக்க ஜி.வி.பிரகாஷ் ஒப்பந்தமாகியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. அறிவழகனின் மூன்று படங்களுமே த்ரில் படங்கள் என்பதால் இந்த படமும் திகில் படமாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விரைவில் தொடங்கவுள்ளதாகவும், இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷூக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை உள்பட பிற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு விரைவில் நடைபெறும் என்றும் இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

More News

அஜித் ஒரு இண்டீரியர் டிசைனர் என்பது யாருக்காவது தெரியுமா?

அஜித் ஒரு நடிகர், போட்டோகிராபர், பிரியாணி பிரியர், பைக் ரைடர் என்பது அனைவரும் தெரிந்ததே. ஆனால் அவர் ஒரு மிகச்சிறந்த இண்டீரியர் டிசைனர் என்பது பலருக்கு தெரியாத உண்மை...

நடிகை ராதிகாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் வாரிசும் பிரபல நடிகையுமான ராதிகாவுக்கு இன்று பிறந்த நாள். இன்றைய பிறந்த நாள் அவருக்கு சந்தோஷமான நாளாக இருக்க வேண்டும் என்று அவரை IndiaGlitz சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்

வலிய வந்து வம்பில் மாட்டிக்கொண்ட காயத்ரி

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிவிட்டாலும் காயத்ரியை இன்னும் ஓவியா ஆர்மியினர் மன்னிக்கவும் இல்லை, மறக்கவும் இல்லை.

முதல்வரை மாற்ற வேண்டும்: சி.ஆர்.சரஸ்வதி

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி ஒரு மாநிலத்தின் முதல்வரை எம்.எல்.ஏக்கள் தேர்வு செய்வார்கள்...

ரிலீசுக்கு முன்பே ரூ.120 கோடி வசூல்: சாதனை செய்த அஜித்தின் 'விவேகம்'

கோலிவுட் திரையுலகில் ஒரு திரைப்படம் ரிலீஸ் ஆகி அந்த படம் ரூ.100 கோடி வசூல் செய்தாலே மிகப்பெரிய வெற்றியாக கருதப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ரிலீசுக்கு முன்பே ரூ.120 வியாபாரம் ஆகி அஜித்தின் 'விவேகம்' புதிய சாதனையை ஏற்படுத்தியுள்ளது...