ஜிவி பிரகாஷின் அடுத்த படத்தை இயக்கும் தேசிய விருது பட இயக்குனர்

  • IndiaGlitz, [Saturday,February 24 2018]

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த வெற்றிப்படமான 'நாச்சியார்' திரைப்படம் தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலா அவர்களால் இயக்கப்பட்ட நிலையில் அவருடைய அடுத்த படத்தையும் தேசிய விருது பெற்ற பட இயக்குனர் ஒருவர் இயக்கவுள்ளார்.

கடந்த 2006ஆம் ஆண்டு வெளிவந்த தேசிய விருது பெற்ற திரைப்படமான 'வெயில்' படத்தை இயக்கிய இயக்குனர் வசந்தபாலன், ஜிவி பிரகாஷின் அடுத்த படத்தை இயக்க ஒப்பந்தமாகியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

ஏற்கனவே ஜிவி பிரகாஷ், செம, 4G, ஐங்கரன், அடங்காதே, குப்பத்து ராஜா, 100% காதல், சர்வம் தலமயம்', ரெட்டை கொம்பு, கருப்பு நகரம், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் படம் என பத்து படங்களில் நடித்து கொண்டிருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இயக்குனர் ராம் மற்றும் 'அறம்' இயக்குனர் கோபி நயினார் இயக்கவுள்ள படங்களிலும் ஜிவி பிரகாஷ் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.