சீரியலுக்காக பேசிய வசனம் உண்மையான சோகம்.. ஜி மாரிமுத்துவின் வீடியோ வைரல்..!

  • IndiaGlitz, [Friday,September 08 2023]

பிரபல குணச்சித்திர நடிகர் ஜி மாரிமுத்து இன்று காலை மாரடைப்பு காரணமாக காலமான நிலையில் அவர் ’எதிர்நீச்சல்’ சீரியலுக்காக பேசிய வசனத்தின் வீடியோ தற்போது இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

அந்த வீடியோவில் அவர் தனது தம்பியிடம், ‘எனக்கு நெஞ்சு வலி வந்து அழுத்துது.. அது உடம்பில் வருகிற வலியா? அல்லது மனசுல வர்ற வலியா என்று எனக்கு தெரியவில்லை.. அப்பப்ப வலி வந்து எனக்கு ஏதோ எச்சரிக்கை செய்றதுன்னு நினைக்கிறேன்’ என்று கூறுவார்

அதற்கு அவரது தம்பி ’நீங்க ஒன்னும் பயப்படாதீங்க அண்ணே, உங்களுக்கு ஒன்னும் இல்லை என்று ஆறுதல் சொல்கிறார். ஆனால் ’ஏதோ கேட்டது நடக்க போகுதுன்னு தோணுதுப்பா, எனக்கு நெஞ்சுவலி வந்து அப்பப்ப எச்சரிக்கை பண்ணுதுடா.. எதோ மாறி மாறி பேசறேன், எனக்கே தெரியுது’ என்று கூறினார்.

நெஞ்சு வலி வருகிறது என்று சீரியலுக்காக ஜி மாரிமுத்து வசனம் பேசிய நிலையில் இன்று உண்மையாகவே நெஞ்சுவலியால் மாரிமுத்து இறந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

More News

டப்பிங் பேசும் போது மாரடைப்பு.. தானே காரை ஓட்டி மருத்துவமனைக்கு சென்ற ஜி மாரிமுத்து..!

பிரபல குணச்சித்திர நடிகர் மாரிமுத்து டப்பிங் பேசும் போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாகவும் இதனையடுத்து அவர் தானே காரை ஓட்டிக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றதாகவும் கூறப்படுகிறது.  

'எதிர்நீச்சல்' நடிகர் மாரிமுத்து திடீர் மரணம்.. அதிர்ச்சியில் திரையுலகினர்..!

திரைப்பட நடிகர், இயக்குனர் மற்றும் 'எதிர்நீச்சல்' சீரியலில் முக்கிய கேரக்டரில்   நடித்த ஜி மாரிமுத்து திடீரென காலமானார். அவரது மறைவு திரையுலகினர் மற்றும் சின்னத்திரை உலகினர்களுக்கு பெரும் அதிர்ச்சியை

WWE வீரர்களுடன் நடித்த கார்த்தி.. எந்த படத்திற்காக தெரியுமா?

நடிகர் கார்த்திக் நடித்த 'ஜப்பான்' என்ற திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாக இருக்கும் நிலையில் தற்போது அவர்  நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார்.

ஜெயம் ரவியின் 'இறைவன்' படத்தில் 15 வருடங்களுக்கு பின் இணைந்த ஜோடி..!

ஜெயம் ரவி, நயன்தாரா நடிப்பில் அகமது இயக்கத்தில் உருவாகிய 'இறைவன்' திரைப்படம் செப்டம்பர் 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில்

2 பாலிவுட் 'கான்' நடிகர்கள்.. பிரசாத்-பிரபுதேவா.. வேற லெவலில் உருவாகும் 'தளபதி 68'

பாலிவுட் திரையுலகின் 2 முன்னணி 'கான்' நடிகர்கள் மற்றும் பிரசாந்த், பிரபுதேவா என 'தளபதி 68' படத்தின் நட்சத்திரங்கள் தேர்வு வேற லெவலில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.