அசந்து தூங்கியவரை பிணம் என நினைத்து தகனம்: 15 வினாடிகளில் சாம்பலான கொடுமை
- IndiaGlitz, [Monday,April 13 2020]
அமெரிக்காவில் அசந்து தூங்கிய இறுதிச் சடங்கு செய்யும் ஊழியர் ஒருவரை தெரியாமல் தகனம் செய்ததால் 15 நொடிகளில் சாம்பலான அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்துள்ளது
அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினமும் ஆயிரக்கணக்கில் அதிகரித்துக் கொண்டே வருகிறது. குறிப்பாக நியூயார்க் நகரில் தினமும் நூற்றுக்கணக்கான பிணங்கள் இறுதி சடங்கிற்கு வருகிறது என்பதால் இறுதி சடங்கு செய்யும் ஊழியர்கள் 16 முதல் 18 மணி நேரம் பணி செய்கின்றனர்
இந்த நிலையில் இறுதிச்சடங்கு செய்யும் மைக்கேல் என்ற ஊழியர் தொடர்ச்சியாக 16 மணி நேரம் பணி புரிந்ததால் அயர்ச்சி காரணமாக அங்கிருந்த ஸ்ட்ரெச்சரில் படுத்து தூங்கிவிட்டார். அவர் தூங்குவது தெரியாமல் மற்றொரு இறுதிச்சடங்கு செய்யும் ஊழியர், தூங்கும் மைக்கேலை பிணம் என நினைத்து மின் மயானத்தில் தகனம் செய்துவிட்டார். 1400 டிகிரி வெப்பநிலையில் என்ன நடந்தது என்றே தெரியாமல் மைக்கேல் அலறியபடி 15 நொடிகளில் சாம்பலாக்கி விட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு தகனம் செய்தவர் அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து விசாரணை நடந்தபோது மைக்கேலை தகனம் செய்த ஊழியர் புதிதாக வேலைக்கு சேர்ந்தவர் என்றும் ஸ்ட்ரெச்சரில் பொதுவாக பிணம் நான் கொண்டுவரப்படும் என்பதால் அதில் இருந்த மைக்கேலையும் பிணம் என நினைத்து தகனம் செய்து விட்டதாகவும் கூறியுள்ளார். இது குறித்து அமெரிக்க போலீசார் மேலும் விசாரணை செய்து வருகின்றனர். வேலைப்பளுவின் காரணமாக அசந்து தூங்கிய ஒருவர் தகனம் செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது