மதுரையிலும் முழு ஊரடங்கு: தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே கொரோனா வைரஸின் தாக்கம் மிக அதிகமாக இருந்து வருகிறது. தினந்தோறும் தமிழகத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களும் சென்னையில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களும் கொரோனா வைரஸால் தாக்கப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள திருவள்ளூர் செங்கல்பட்டு காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களிலும் கொரோனா வைரஸின் தாக்கம் மிக அதிகமாக இருப்பதால் இந்த நான்கு மாவட்டங்களில் மட்டும் ஜூன் 19-ஆம் தேதி முதல் ஜூன் 30-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுவதாக தமிழக அரசு சமீபத்தில் அறிவித்தது இந்த முழு ஊரடங்கின்போது காலை 6 மணி முதல் மதியம் 2 மணிவரை அத்தியாவசிய கடைகள் மட்டுமே திறந்திருக்க வேண்டும் என்றும் இரு சக்கர நான்கு சக்கர வாகனங்களில் யாரும் வெளியே செல்லக் கூடாது என்றும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.

இந்த நிலையில் ஜூன் 21 மற்றும் 28 ஆகிய இரண்டு ஞாயிற்றுகிழமைகளிலும் எந்தவிதமான தளர்வும் இன்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்று காலை வெளியான தகவலின்படி மேலும் 4 அல்லது 5 மாவட்டங்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பலாம் என்று கூறப்பட்டது. அதன்படி சற்று முன்னர் நாளை நள்ளிரவு முதல் வரும் 30ஆம் தேதி வரை மதுரையிலும் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் எந்தெந்த மாவட்டத்திற்கு முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.