சென்னையில் ஊரடங்கை தீவிரப்படுத்தும் திட்டமா? சென்னை ஐகோர்ட் கேள்வி

சென்னையில கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்வதை அடுத்து சென்னையில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. இந்த நிலையில் அடுத்தகட்ட நடவடிக்கையாக சென்னையில் முழு ஊரடங்கு அமல் படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இதுகுறித்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையின் போது ’சென்னையில் ஊரடங்கு உத்தரவை மேலும் தீவிரப்படுத்த திட்டம் உள்ளதா என தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பிய சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் ‘சென்னையில் ஊரடங்கை மேலும் தீவிரப்படுத்துவது குறித்து நாளைக்குள் விளக்கம் அளிக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

சென்னையில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருவதையடுத்து முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுமா? என்பது குறித்து தமிழக அரசு தனது முடிவை நாளை சென்னை ஐகோர்ட்டில் தெரிவிக்க இருப்பதால் சென்னை மக்கள் பெரும் பரபரப்பில் உள்ளனர். மேலும் சென்னையில் முழு ஊரடங்கு அமல்படுத்துவது என முடிவு செய்தால், அத்தியாவசிய தேவையான பொருட்களை வாங்கி குவிக்க பொதுமக்கள் ஒரே நேரத்தில் கடைகளில் குவிய வாய்ப்பு உள்ளதாகவும் இதேபோன்ற ஒரு அறிவிப்பால் கோயம்பேடு காரணமாக தொற்று அதிகமானதை கவனத்தில் கொண்டு தமிழக அரசு செயல்பட வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.