மீண்டும் முழு ஊரடங்கு: மாவட்ட ஆட்சியர்களின் அறிவிப்பால் பரபரப்பு
- IndiaGlitz, [Saturday,May 02 2020]
ஊரடங்கிற்குள் ஒரு ஊரடங்காக சென்னை உள்பட 5 மாவட்டங்களில் 4 நாட்கள் முழு ஊரடங்கு உத்தரவு சமீபத்தில் பிறப்பிக்கப்பட்டது என்பதும் இந்த முழு ஊரடங்கு காலத்தில் காய்கறி, பால், மளிகை உள்ளிட்ட அத்திவாசிய தேவைகளுக்குரிய கடைகளும் மூடப்பட்டிருந்தது என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் சென்னை உள்பட தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வரும் நிலையில் ஒருசில மாவட்ட ஆட்சியர்கள் நாளை முழுவதும் முழு ஊரடங்கு என அறிவித்துள்ளனர். திருவாரூர், அரியலூர், கடலூர், தஞ்சை மாவட்டங்களில் நாளை முழு ஊரடங்கு என அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு செய்துள்ளதால் அம்மாவட்ட பொதுமக்கள் பரபரப்பில் உள்ளனர்.
அதேபோல் திருநெல்வேலி மாவட்டத்தில், நெல்லை மாநகராட்சியில் மட்டும் நாளை முழு ஊரடங்கு என அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கொரோவின் பாதிப்பில் இருந்து பொதுமக்கள் தப்பிக்க இன்னும் சில நாட்கள் முழு ஊரடங்கை அறிவிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.