டீக்கடையில் வாங்கிய வடையில் முழு பிளேடு: அதிர்ச்சியில் சப் இன்ஸ்பெக்டர்!

  • IndiaGlitz, [Friday,November 27 2020]

நிலக்கோட்டை அருகே டீக்கடை ஒன்றில் வாங்கிய வடையில் முழு பிளேடு இருந்ததை பார்த்த சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் அதிர்ச்சி அடைந்த சம்பவம் தற்போது வெளிவந்துள்ளது

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே விளாம்பட்டி காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் கனகராஜ். இவர் இன்று காலை பேருந்து நிலையம் அருகில் உள்ள டீக்கடையில் டீ சாப்பிட்டுவிட்டு வீட்டிற்கு தேவையான வடைகளை வாங்கிச் சென்றார்

அவர் வீட்டுக்கு சென்று அந்த வடைகளை குடும்பத்தினரிடம் கொடுத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது ஒரு வடையில் முழு பிளேடு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து அவர் டீ கடைகாரரிடம் இதுகுறித்து புகார் கூறியதோடு உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் அளித்தார்

உடனடியாக உணவு பாதுகாப்பு அதிகாரிகள் டீ கடைக்கு வந்து அந்த கடையில் வடை சுட பயன்படுத்தப்பட்ட மாவு மற்றும் பருப்புகளை பறிமுதல் செய்து ஆய்வுக்கு எடுத்து சென்றனர் மேலும் டீ கடை உரிமையாளருக்கு உணவு பாதுகாப்பு அலுவலர்கள் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

பொதுமக்கள் சாப்பிடும் வடையில் ஒரு முழு பிளேடு இருந்த தகவல் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

More News

விஜய்சேதுபதி நடிக்க வேண்டிய படத்தில் விக்ரம் நடிக்கின்றாரா?

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தற்போது ஒரே நேரத்தில் சுமார் ஒரு டஜன் படங்களில் நடித்து வருகிறார் என்பதும் அவற்றில் பாதி படங்களின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராக இருக்கின்றன

மாலத்தீவில் மாஸ் போஸ்: சமந்தாவின் உச்சகட்ட கவர்ச்சி!

திருமணத்திற்கு பின்னரும் தமிழ் திரையுலகில் வெற்றிகரமாக வலம் வந்து கொண்டிருக்கும் ஒரே நடிகை சமந்தா தான் என்பது ரசிகர்களின் கருத்தாக உள்ளது.

இந்தியாவின் முதல் மார்ஷியல் ஆர்ட் திரைப்படம்! 5 நிமிட வீடியோ வைரல்!

ஹாலிவுட்டில் புரூஸ்லி நடித்த படங்கள் உள்பட பல திரைப்படங்கள் மார்ஷியல் ஆர்ட்ஸ் குறித்து வெளிவந்து ரசிகர்களின் வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே.

ரொம்ப கேவலமா இருக்கு: நிஷாவை கலாய்த்த ரியோ!

பிக்பாஸ் வீட்டில் அர்ச்சனா குரூப்பினர் தனியாக இருக்கும்போது அவர்களுக்குள் சிரித்து விளையாடுவதும், ஜோக்கடிப்பதும் வழக்கமான ஒன்றுதான். அவர்கள் அடித்த ஜோக்குகளுக்கு அவர்களே

புயலுக்கு நடுவிலும் மக்களுக்காக கார் ஓட்டிய சென்னை இளைஞர்… நெகிழ்ச்சி அனுபவத்தை பகிரும் வீடியோ!!!

நிவர் புயல் ஏற்படுத்திய தாக்கத்தால் கடந்த 2 நாட்களாக சென்னையே ஸ்தம்பித்து போய் இருந்தது.