close
Choose your channels

சொத்தை காரணத்திற்காக மெர்சிடிஸ்-பென்ஸ் காரை கொளுத்திய இளைஞர்… வைரலாகும் வீடியோ!!!

Saturday, October 31, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சொத்தை காரணத்திற்காக மெர்சிடிஸ்-பென்ஸ் காரை கொளுத்திய இளைஞர்… வைரலாகும் வீடியோ!!!

 

ரஷ்யாவில் யூடியூப் சேனலை இயக்கி வருபவர் மைக்கேல் லிட்வின். இவர் ரஷ்யாவில் பிரபலமான இளைஞராக அறியப்படுகிறார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தன்னுடைய சேனலுக்காக லிட்வின் ஒரு வீடியோவை எடுத்து வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோவில் லிட்வின் தன்னுடைய மெர்சிடிஸ்-பென்ஸ் காரை யாரும் இல்லாத ஒரு இடத்தில் கொண்டு போய் நிறுத்துகிறார்.

பின்பு அதே காரில் இருந்து 2 பெட்ரோல் கேனை எடுத்து காருக்கு உள்ளேயும் வெளியேயும் பெட்ரோலை ஊற்றுகிறார். பெட்ரோலை ஊற்றிவிட்டு அந்த இடத்தில் இருந்து சற்று தள்ளி நின்று காருக்கு தீ வைக்கிறார். தீ வைக்கும்போது அவருடைய முகத்தில் கடுமையான கோபம் தெரிகிறது. தீ வைத்த சில வினாடிகளில் அந்தக் கார் முற்றிலும் தீப்பிடித்து எரிந்து நாசமாகிறது.

அந்தக் காரின் மதிப்பு 2.42 கோடி எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் லிட்வின் வெளியிட்ட இந்த வீடியோவை இதுவரை 10 மில்லியன் மக்கள் பார்த்து இருக்கின்றனர். இதுகுறித்து கருத்து தெரிவித்த லிட்வின் நான் விளம்பரத்திற்காக மட்டும் என்னுடைய காரை எரிக்கவில்லை. கடந்த சில வருடங்களுக்கு முன்பு நான் என்னுடைய இந்தக் காரை (மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஜி4 63s) வாங்கினேன். வாங்கியதில் இருந்தே அடிக்கடி பழுதாகிக் கொண்டே இருக்கிறது.

இந்த விஷயத்தை நான் என்னுடைய விநியோகஸ்தருக்கு தெரியப் படுத்தினேன். ஆனால் எந்த பலனும் இல்லை. தொடர்ந்து இந்த கார் கொடுத்த நெருக்கடியால் நான் விரக்தி அடைந்து விட்டேன். அதனால் இந்தக் காரை எரித்து விட்டேன் எனக் கூறியிருக்கிறார். இந்தக் காரணத்தைக் கேட்டால் அடப்பாடி… இப்படியா பண்ணுவ.. என நமக்குத் தோன்றலாம். அப்படித்தான் இந்த வீடியோவை பார்ப்போருக்கும் தோன்றி இருக்கிறது. ஆனால் லிட்வின் இதுகுறித்து கவலை அடையாமல் என்னுடைய விநியோகஸ்தருக்கு இது கண்டிப்பாகத் தெரிய வேண்டும் எனக் கூறியிருக்கிறார்.

ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவனமான பென்ஸ் நிறுவனம் உலகம் முழுவதும் பிரபலமாகக் கருதப்பட்டு வருகிறது. அதன் விலையும் வாயைப் பிளக்க வைக்கும் அளவிற்கு இருக்கும். அதோடு இந்நிறுவனத்தின் சில கார்களை யாராலும் வாங்க முடியாத வகையில் குறிப்பட்ட அளவே தயாரிக்கின்றனர். இப்படி இருக்கும் போது இந்நிறுவனத்தின் ஒரு கார் பழுதடைந்து கொண்டே இருக்கிறது என்ற ஒரு காரணத்திற்காக இளைஞர் ஒருவர் அதை எரித்து நாசாமாக்கியது கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment