நாளை முதல் டீக்கடைகள் திறக்க அனுமதி: மேலும் சில தளர்வுகளை அறிவித்த தமிழக அரசு
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வந்ததை அடுத்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் சமீபத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மே 21-ஆம் தேதி வரை நீடிப்பதாக அறிவித்தார். அதில் மேலும் சில தளர்வுகளை அறிவித்தார் என்பதும் அந்த தளங்களில் ஒன்று டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்கலாம் என்றும் கூறப்பட்டது என்பது தெரிந்ததே.
ஆனால் அதே நேரத்தில் தமிழகம் முழுவதும் டீ கடைகள் திறக்க அனுமதிக்க அனுமதிப்பது குறித்த எந்த தகவலும் தமிழக அரசின் உத்தரவில் இல்லாமல் இருந்தது டீக்கடை உரிமையாளர்களை பெரும் அதிருப்திக்கு உள்ளாக்கியது. டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதித்த தமிழக அரசு, டீ கடைகளை திறக்க அனுமதிக்காதது ஏன் என்ற கேள்வியை எதிர் கட்சிகள் எழுப்பினர்.
இந்த நிலையில் சற்று முன் தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று குறைந்த 27 மாவட்டங்களில் டீக்கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. காலை 6 மணி வரை மாலை 5 மணி வரை டீக்கடைகளை திறக்கலாம் என்றும் ஆனால் அதே நேரத்தில் பார்சல் மட்டுமே அளிக்க வேண்டும் என்றும் டீக்கடைகளில் உட்கார்ந்து கொண்டோ, நின்று கொண்டோ டீ குடிக்க அதற்கு அனுமதி இல்லை என்றும், அதேபோல் கொரோனா தொற்று அதிகமுள்ள 11 மாவட்டங்களில் டீக்கடைகள் திறக்க அனுமதி இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் டீ கடை உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
அதுமட்டுமின்றி நாளை முதல் அரசு அலுவலகங்களில் உள்ள இ-சேவை மையங்கள் திறக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இனிப்பு மற்றும் கார வகைகள் விற்கும் கடைகள் காலை 8 மணிமுதல் பிற்பகல் 2 மணி வரை செயல்பட அனுமதி என்றும், கட்டுமான நிறுவனங்கள் 50% பணியாளர்களுடன் செயல்பட அனுமதி என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout