தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறப்பது எப்போது? டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழகத்தில் 40 நாட்களுக்கு பின் டாஸ்மாக் கடைகள் கடந்த 7ஆம் தேதி திறக்கப்பட்ட நிலையில், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு காரணமாக 9ஆம் தேதி மீண்டும் மூடப்பட்டது. இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நேற்றும் இன்றும் நடந்த நிலையில் கடந்த சில மணி நேரங்களுக்கு முன்பாக டாஸ்மாக் கடைகளை திறக்க தடை இல்லை என்றும் டாஸ்மார்க் குறித்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரிக்க இடைக்கால தடை என்றும் சுப்ரீம் கோர்ட் அதிரடியாக உத்தரவிட்டது
இந்த உத்தரவை அடுத்து நாளை முதல் டாஸ்மாக் கடைகள் திறக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டது. இந்த நிலையில் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் நாளை முதல் திறக்கப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் சற்றுமுன் அறிவித்துள்ளது. மேலும் கொரோனா தொற்று அதிகம் உள்ள சிவப்பு மண்டலங்களை தவிர பிறபகுதிகளில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
மேலும் டாஸ்மாக் கடைகளில் மது பானங்கள் வாங்க, கிழமை வாரியாக கலர்கலரான டோக்கன்கள் வழங்கப்படும் என்றும் ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு வண்ணத்தில் டோக்கம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ஞாயிறு அன்று ஆரஞ்சு நிறத்திலும், திங்களன்று பச்சை நிறத்திலும், செவ்வாயன்று சிவப்பு நிறத்திலும், புதன் அன்று நீல நிறத்திலும், வியாழன்று ஊதா நிறத்திலும், வெள்ளி அன்று பிரவுன் நிறத்திலும், சனியன்று கருப்பு நிறத்திலும் டோக்கன் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
மேலும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும்போது உச்சநீதிமன்ற விதிகளை உரிய வகையில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அனைத்து மாவட்ட காவல் ஆணையர்களுக்கு டிஜிபி உத்தரவு பிறப்பித்துள்ளார். 550 பேர் மட்டுமே வரிசையில் நிற்கவேண்டும் என்றும் மற்றவர்களுக்கு டோக்கன் வழங்க வேண்டும் என்றும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout