பயமாகவும் இருக்கு, சந்தோஷமாகவும் இருக்கு: 'தலைவர் 168' பட நடிகையின் டுவிட்!
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ’தலைவர் 168’ படத்தின் படப்பிடிப்பில் நாளை முதல் கலந்துகொள்ள இருக்கும் பிரபல நடிகை தனது சமூக வலைதளப் பக்கத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்ளவிருப்பது பயமாகவும் இருக்கிறது அதே நேரத்தில் எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது என்று ட்விட் செய்துள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்க உள்ள திரைப்படம் ’தலைவர் 168'. இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக மீனா மற்றும் குஷ்பு நடிக்க இருப்பதாகவும், ரஜினிக்கு மகளாக அல்லது தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் சமீபத்தில் தொடங்கிய நிலையில் நாளை முதல் இந்த படத்தின் படப்பிடிப்பில் நடிகை குஷ்பு கலந்து கொள்ள உள்ளார். இதனை அடுத்து இன்று அவர் ஹைதராபாத் சென்றுள்ளார் இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் ’தலைவர் 168’ படத்தின் படப்பிடிப்பில் நாளை முதல் கலந்து கொள்ள இருக்கிறேன். நான் இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவிருப்பது சிறிது பயமாகவும் அதே நேரத்தில் அதிக எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது. மீண்டும் ரஜினியுடன் இணைந்து நடிப்பது ஒரு பெரிய சந்தோஷம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பில் மீனா மற்றும் கீர்த்தி சுரேஷ் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே ரஜினியுடன் தர்மத்தின் தலைவன், மன்னன், பாண்டியன், அண்ணாமலை போன்ற படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Landed in Hyderabad.. tomorrow I start shooting for #Thalaivar168 A bit nervous and excited at the same time. Getting back to your roots is overwhelming. Wish me luck friends. ❤️
— KhushbuSundar ❤️ (@khushsundar) December 20, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments