புதிய காற்றழுத்த தாழ்வு நிலை: தமிழகத்திற்கு கனமழையா?

வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த வாரம் சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மிதமான மற்றும் கனமழை பெய்த நிலையில் கடந்த 2 நாட்களாக தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் மட்டும் மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் தற்போது தென்மேற்கு வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை ஒன்று உருவாகி இருப்பதாகவும் இதன் காரணமாக தமிழகத்தில் நாளை முதல் பருவ மழை தீவிரம் அடையும் என்றும் இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து இந்திய ஆய்வு ஆய்வு மையம் தெரிவித்து இருப்பதாவது: தென் மாவட்ட மீனவர்கள் கடலுக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. ஏற்கனவே உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆந்திரா பக்கம் சென்று வலுவிழந்த நிலையில், அரபி கடலில் புதிய புயல் உருவாகியது.

'கியார்' என்று பெயரிடப்பட்ட இந்த புயல் காரணமாக தட்பவெப்ப நிலை மாறி, மூன்று நாட்களாக மழை குறைந்தது. இந்த புயல் அடுத்த சில நாட்களில் ஓமன் கரைப்பகுதியை நோக்கி நகரும். வங்க கடலில், தென் மேற்கு பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதனால் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் மழை தீவிரமடையும் என கூறப்பட்டு உள்ளது.

More News

ஏர்லாக், போர்வெல் மிஷின்: இதை ஏன் முதலில் செய்யவில்லை?

நடுக்காட்டுப்பட்டி என்ற கிராமத்தில் இரண்டு வயது சுர்ஜித் என்ற சிறுவன் வெள்ளிக்கிழமை மாலை ஆழ்துளை கிணற்றில் விழுந்த நிலையில் அந்த சிறுவனை ஆழ்துளையில் இருந்து மீட்க

நடுக்காட்டுப்பட்டியில் சுர்ஜித்திக்காக பிரார்த்தனை செய்யும் நடிகர்!

திருச்சி அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டியில் குழந்தை சுர்ஜித் நல்லபடியாக மீட்கப்பட வேண்டும் என நடிகர் தாமு செய்த பிரார்த்தனை செய்து வருகிறார்.

அனைத்து சுர்ஜித்தையும் காப்பாற்றுங்கள்: ஜிவி பிரகாஷ் வேண்டுகோள்

கடந்த வெள்ளி அன்று திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டி என்ற கிராமத்தில் மூடப்படாமல் இருந்த ஆழ்குழாய் கிணறு ஒன்றில் இரண்டு வயது சுர்ஜித் என்ற சிறுவன்

குழந்தை சுர்ஜித்: 66 மணி நேரமாக தொடரும் போராட்டம்

திருச்சி அருகே நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துழை கிணற்றில் விழுந்த 2 வயது குழந்தை சுர்ஜித்தை மீட்கும் பணி கடந்த 64 மணிநேரத்துக்கும் மேலாக தொடர்ந்து வருகிறது.

'பாகுபலி 2' வசூல் சாதனை முறியடித்ததா பிகில்?

தளபதி விஜய் நடித்த 'பிகில்' திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியான நிலையில் இந்த படம் முதல் வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களில் உலகம் முழுவதும் ரூ 130 கோடி