தமிழகத்தில் அனைத்து கல்லூரிகளிலும் நாளை முதல் வகுப்புகள் ரத்து: தமிழக அரசு உத்தரவு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் தீவிரமாக பரவி வருவதை முன்னிட்டு நாளை முதல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களுக்கு விடுமுறை என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 

ஏற்கனவே 9 முதல் 11ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு இன்று முதல் விடுமுறை என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதேபோல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் விடுமுறை அளிப்பது குறித்து ஆலோசித்து வருவதாக உயர் கல்வித் துறை தெரிவித்திருந்தது 

இந்த நிலையில் நாளை முதல் அனைத்து வகை கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆன்லைன் வாயிலாக மட்டுமே வகுப்புகள் நடைபெறும் என்றும் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மூடப்படும் என்றும் அரசு உத்தரவிட்டுள்ளது.

இருப்பினும் இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மட்டும் இம்மாதம் 31-ஆம் தேதிக்குள் செய்முறை வகுப்புகள் மற்றும் செய்முறைத் தேர்வுகளை முடிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

வாபஸ் இல்லை, மீண்டும் போட்டி என மன்சூர் அலிகான் அறிவிப்பு!

நடிகர் மன்சூர் அலிகான் தேர்தலில் போட்டியிடுவதாக சமீபத்தில் தொண்டாமுத்தூர் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்தார். பின்னர் அவர் வித்தியாசமான முறையில் தொண்டாமுத்தூரில் தேர்தல் பிரச்சாரம்

திருநங்கையாக மாறுவதற்கு முன் ஷகிலா மகள் நடித்த டிவி சீரியல்: வைரல் புகைப்படம்!

மலையாள திரைப்படங்களில் கவர்ச்சியாக நடித்த நடிகை ஷகிலா தற்போது குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் அவருடைய இமேஜ் முற்றிலும் மாறிவிட்டது

கொரோனா விழிப்புணர்வு புகைப்படம் வெளியிட்ட நதியா!

தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை அடுத்து மீண்டும் மத்திய மாநில அரசுகள்

வேட்புமனுக்களை வாபஸ் வாங்கிய பாமக..! புதுச்சேரியில் பரபரப்பு...!

புதுச்சேரியில் 10- தொகுதிகளில்  போட்டியிட இருந்த பாட்டாளி மக்கள் கட்சி, தற்போது வேட்பு மனுக்களை வாபஸ் வாங்கியுள்ளது. 

தீப்பெட்டி கணேசன் குடும்பத்திற்கு உதவி: பிரபல நடிகர், இயக்குனர் அறிவிப்பு

தமிழ் திரையுலகின் காமெடி நடிகர்களில் ஒருவரான தீப்பெட்டி கணேசன் உடல்நல கோளாறு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி காலமானார்.