நாளை முதல் சென்னையில் கடைகள் மூடப்படுகிறது? வணிகர் சங்கம் அதிரடி அறிவிப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா வைரஸ் பாதிப்பு சென்னையில் மிகவும் அதிகரித்து வரும் நிலையில் சென்னை உள்பட நான்கு மாவட்டங்களுக்கு தீவிர ஊரடங்கு அமல்படுத்த மருத்துவர் குழுவினர் முதல்வருக்கு பரிந்துரை செய்துள்ளதாக செய்திகள் வெளியானது.
இந்த நிலையில் நாளை முதல் வரும் 30ம் தேதி வரை சென்னையில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் கடைகள் அடைக்கப்படவுள்ளதாகவும், கொரோனா பரவலை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் அறிவிப்பு செய்துள்ளார். தென் சென்னை மத்திய சென்னை, வட சென்னையில் உள்ள பேரவை உறுப்பினர்கள் இந்த முடிவை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது குறித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகரில் கொரோனா தொற்று அதிகமாகப் பரவுவதை கவனத்தில் கொண்டு நாட்டின் நலன், மக்கள் நலன், வணிகர் நலன் கருதி, தமிழ் நாடு வணிகர் சங்கங்களிந்தலைவர் வெள்ளையன் அவர்கள் அறிவுறுத்தலின்படி 16.06.2020 முதல் 30.06.2020 காலை 6.00 மணிமுதல் மதியம் 2.00 மணி வரை வியாபாரம் செய்து, மதியம் 2.00 மணிக்கு கடைகள் அடைக்க வேண்டும் என்று மத்திய சென்னை, வடசென்னை, தென்சென்னை ஆக மூன்று மாவட்ட நிர்வாகிகள் சேர்ந்து முடிவு செய்யப்பட்டுள்ளது என்று அன்போடு தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout