நாளை முதல் சென்னையில் கடைகள் மூடப்படுகிறது? வணிகர் சங்கம் அதிரடி அறிவிப்பு

கொரோனா வைரஸ் பாதிப்பு சென்னையில் மிகவும் அதிகரித்து வரும் நிலையில் சென்னை உள்பட நான்கு மாவட்டங்களுக்கு தீவிர ஊரடங்கு அமல்படுத்த மருத்துவர் குழுவினர் முதல்வருக்கு பரிந்துரை செய்துள்ளதாக செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் நாளை முதல் வரும் 30ம் தேதி வரை சென்னையில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் கடைகள் அடைக்கப்படவுள்ளதாகவும், கொரோனா பரவலை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் அறிவிப்பு செய்துள்ளார். தென் சென்னை மத்திய சென்னை, வட சென்னையில் உள்ள பேரவை உறுப்பினர்கள் இந்த முடிவை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது குறித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகரில்‌ கொரோனா தொற்று அதிகமாகப்‌ பரவுவதை கவனத்தில்‌ கொண்டு நாட்டின்‌ நலன்‌, மக்கள்‌ நலன்‌, வணிகர்‌ நலன்‌ கருதி, தமிழ்‌ நாடு வணிகர்‌ சங்கங்‌களிந்தலைவர் வெள்ளையன் அவர்கள் அறிவுறுத்தலின்‌படி 16.06.2020 முதல்‌ 30.06.2020 காலை 6.00 மணிமுதல்‌ மதியம்‌ 2.00 மணி வரை வியாபாரம்‌ செய்து, மதியம்‌ 2.00 மணிக்கு கடைகள்‌ அடைக்க வேண்டும்‌ என்று மத்திய சென்னை, வடசென்னை, தென்சென்னை ஆக மூன்று மாவட்ட நிர்வாகிகள்‌ சேர்ந்து முடிவு செய்யப்பட்டுள்ளது என்று அன்போடு தெரிவித்துக்‌ கொள்கிறோம்‌.

இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

More News

பாவம் சீனா... தொடரும் அடுத்தடுத்த பாதிப்புகள்!!! மனதை உருக்கும் சம்பவங்கள்!!!

கொரோனா வைரஸின் ஆரம்பக்கட்டத்தில் சீனா படாதப்பாடு பட்டு அதைக் கட்டுக்குள் கொண்டுவந்தது. இதையடுத்து கொரோனா வைரஸ் பரவல்

கொரோனாவால் அதிகரித்த உயிரிழப்பு: புதைக்க இடமில்லாமல் பிரேசில் செய்த காரியம்!!!

உலக அளவில் கொரோனாவால் அதிக உயிரிழப்புகளைச் சந்தித்துவரும் நாடுகளுள் ஒன்றான பிரேசில் தற்போது ஒரு மோசமான காரியத்தைச் செய்துவருவதாக அந்நாட்டு

சென்னையில் 30ஆம் தேதி வரை முழு பொதுமுடக்கம்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னையில் வரும் 19-ம் தேதி முதல் முழு ஊரடங்கு என தமிழக அரசு சற்றுமுன் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் 2வது அலை எப்போது? மருத்துவ நிபுணர் குழு பேட்டி

தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் மருத்துவ நிபுணர் குழுவிடம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

கொரோனா வைரஸ் எதிரொலி: குழந்தைகளை மாற்றி கொண்ட தாய்மார்கள்

கொரோனா வைரஸ் பாதிப்பு எப்போது யாருக்கு வரும் என்று தெரியாத நிலையில் மர்மமாக உள்ளது. கர்ப்பிணிக்கு கொரோனா வைரஸ் இருந்தாலும் பிறக்கும் குழந்தை வைரஸ் தாக்குதல் இல்லாமல்