நாளை முதல் 'வலிமை' படத்தில் திடீர் மாற்றம்: விறுவிறுப்பு அதிகரிக்குமா?

அஜித் நடித்த ‘வலிமை’ திரைப்படம் நேற்று வெளியாகி கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில் நாளை முதல் திடீர் மாற்றம் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அஜித் நடித்த ‘வலிமை’ திரைப்படம் நேற்று வெளியான நிலையில் இந்த படத்தில் ஆக்ஷன் காட்சிகள் ஹாலிவுட் தரத்தில் அதிரடியாக இருப்பதாகவும் ஆனால் அதே நேரத்தில் வேண்டுமென்றே சென்டிமென்ட் காட்சிகள் திணிக்கப்பட்டு உள்ளதாகவும் விமர்சகர்கள் மற்றும் ஊடகங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். மேலும் படத்தின் நீளம் அதிகமாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த நிலையில் நாளை முதல் ‘வலிமை’ படத்தின் 14 நிமிட காட்சிகள் குறைக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை அடுத்து சென்டிமெண்ட் காட்சிகள் படத்தில் இருந்து நீக்கப்படும் என்றும் இதனால் ‘வலிமை’ திரைப்படத்தின் விறுவிறுப்பு அதிகமாகும் என்றும் கூறப்படுகிறது.