நாளை முதல் தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு: முதலமைச்சர் அறிவிப்பு
- IndiaGlitz, [Monday,March 23 2020]
தமிழகத்தில் நாளை மாலை 6 மணி முதல் மார்ச் 31 வரை அனைத்து மாவட்ட எல்லைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு நாளை மாலை 6மணி முதல் பிறப்பிக்கப்படுவதாகவும் மார்ச் 31ம் தேதி வரை இந்த தடை உத்தரவு நீடிக்கும் என முதலமைச்சர் அறிவிப்பு செய்துள்ளார்.
ஊரடங்கு உத்தரவை அனைத்து மாநில அரசுகளுக்கும் கடுமையாக பின்பற்ற வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளதை அடுத்து இந்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டால் என்னவெல்லாம் கிடைக்காது, என்னென்ன கிடைக்கும் என்பது குறித்து தற்போது பார்ப்போம்.
உணவு பொருட்கள், மருத்துவ பொருட்கள், செய்தித்தாள், ஏடிஎம், பெட்ரோல், டீசல், மின்சாரம், தண்ணீர், சிலிண்டர் போன்ற வீட்டிற்கு தேவையான சேவைகள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டாலும் கிடைக்கும்
வணிக நிறுவனங்கள், பட்டறைகள், அத்தியாவசிய சேவைகள் அல்லாத வணிகம் சார்ந்த குடோன்கள், தொழிற்சாலை சார்ந்த தனியார் நிறுவனங்கள் ஆகியவை மூடப்படும். மேலும் ஐடி போன்ற நிறுவனங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்தே வேலை செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.