'தளபதி 66' படப்பிடிப்பு: வைரலாகும் விஜய் வீடியோ
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடிக்க இருக்கும் ’தளபதி 66’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியிருக்கும் நிலையில் இந்த படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக தளபதி விஜய் விமான நிலையம் சென்ற புகைப்படம் மற்றும் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் ’தளபதி 66’ படத்தின் பூஜையுடன் கூடிய முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்தது. இதனை அடுத்து மே 3ஆம் தேதி முதல் அடுத்த கட்ட படப்பிடிப்பு நடைபெறும் என்றும் கூறப்பட்டது. இந்த படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக விஜய் நேற்று இரவு சென்னையில் இருந்து விமானம் மூலம் ஐதராபாத் கிளம்பிச் சென்றார். சென்னை விமான நிலையத்தில் விஜய் நடந்து சென்ற புகைப்படம் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் வரை நடைபெறும் என ஏற்கனவே தகவல் வெளியாகி உள்ளது.
விஜய் ஜோடியாக ராஷ்மிகா மந்தனாவும், விஜய்யின் தந்தையாக சரத்குமாரும், விஜய்யின் சகோதரராக ஷாம் நடிக்கும் இந்த படத்திற்கு தமன் இசையமைத்து வருகிறார். வம்சி இயக்கத்தில் தில் ராஜூ தயாரிப்பில் உருவாகி வரும் இந்தப் படம் இந்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
#ThalapathyVIJAY Anna at Hyderabad Airport! #Thalapathy66 @actorvijay pic.twitter.com/ZiinQYCREB
— Vishnu Subramanian (@S_VishnuVijay) May 2, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments