கொரோனா எச்சரிக்கை நடவடிக்கை: இன்று முதல் தமிழக கேரள எல்லை மூடல்

  • IndiaGlitz, [Friday,March 20 2020]

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் அதன் ஒரு பகுதியாக இன்று மாலை முதல் தமிழக-கேரள எல்லை மூடப்படும் என்று கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டத்தில் உள்ள ஒன்பது சோதனைச் சாவடிகளும் இன்று மாலை 5 மணி முதல் மூடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கும், கேரளாவில் இருந்து தமிழகத்திற்கும் எந்த வாகனமும் அனுமதிக்கப்படாது என்று கோவை ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

கொரோனாவின் தாக்கம் கேரளாவில் மிக அதிகமாக இருப்பதால் கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு கொரோனா வைரஸ் பரவி விடக் கூடாது என்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

கொரோனாவை தவிர்க்க தனிமனித பாதுகாப்பு உறுதிமொழி

தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்படாமல் தடுக்க தனிமனித உறுதிமொழி குறித்து ஒரு அறிக்கையை தமிழக அரசின் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

தமிழக முதல்வர், துணை முதல்வர் எதிர்க்கட்சித் தலைவருக்கும் உடல் வெப்பநிலை பரிசோதனை???

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக நாடு முழுவதும் முக்கிய இடங்களில் உடல் வெப்ப நிலையை பரிசோதனை செய்யும் பணிகளில் இந்திய சுகாதாரத் துறை ஈடுபட்டுள்ளது.

கொரோனா வைரஸ் விழிப்புணர்வு குறித்த நடிகை த்ரிஷா!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான நடிகை த்ரிஷா, கொரோனா விழிப்புணர்வு குறித்தும், கொரோனா பரவாமல் தடுக்க என்னென்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மலேசிய முன்னாள் பிரதமர் மகாதீர் மொஹம்மத்திற்கு கொரோனா அறிகுறி!!! மலேசிய நிலவரம்!!!

மலேசிய முன்னாள் பிரதமர் மகாதீர் மொஹம்மத், நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரைச் சந்தித்தப் பின் தனக்கு கொரோனா அறிகுறி இருப்பதாகக் கூறி

கொரோனா பலி எண்ணிக்கை 10 ஆயிரத்தைத் தாண்டியது!!!

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டி இருக்கிறது. இதுவரை உலகம் முழுவதும் 245,834 பேருக்கு நோய் தொற்று இருப்ப