இன்று முதல் 'தி கேரளா ஸ்டோரி' காட்சிகள் ரத்து.. தமிழக தியேட்டர் நிர்வாகம் கூறிய காரணம் இதுதான்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
’தி கேரளா ஸ்டோரி’ என்ற திரைப்படம் கடந்த வெள்ளி அன்று தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் வெளியான நிலையில் இந்த படத்திற்கு தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகிய இரண்டு மாநிலங்களில் மிகப்பெரிய எதிர்ப்பு கிளம்பியது. அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் சில மத அமைப்புகள் இந்த படத்திற்கு எதிராக போராட்டம் செய்ததன் காரணமாக தமிழகத்தில் இந்த படம் வெளியான தியேட்டர்களில் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் இந்த படத்திற்கு எதிர்ப்பு வலுத்து வருவதை அடுத்து இன்று முதல் ’தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் திரையிடப்படாது என தியேட்டர் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
பல்வேறு தரப்பின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் நாடு முழுவதும் கடந்த 5ஆம் தேதி வெளியான இந்த படம் தமிழ்நாட்டில் மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் மட்டும் திரையிடப்பட்டு வந்தது. இந்த நிலையில் போராட்டம் தீவிரமடைந்ததால் இன்று முதல் ’தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் திரையிடப்படாது என தியேட்டர் நிர்வாகங்கள் அறிவித்துள்ளன.
ஆனால் அதே நேரத்தில் கேரளாவில் இன்னும் ஒரு சில திரையரங்குகளில் இந்த படம் திரையிடப்பட்டு வருகிறது என்பதும், தமிழ்நாடு கேரளா மற்ற அனைத்து மாநிலங்களிலும் இந்த படம் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் திரையரங்குகளில் திரையிடப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments