இன்று முதல் 'தி கேரளா ஸ்டோரி' காட்சிகள் ரத்து.. தமிழக தியேட்டர் நிர்வாகம் கூறிய காரணம் இதுதான்..!

  • IndiaGlitz, [Sunday,May 07 2023]

’தி கேரளா ஸ்டோரி’ என்ற திரைப்படம் கடந்த வெள்ளி அன்று தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் வெளியான நிலையில் இந்த படத்திற்கு தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகிய இரண்டு மாநிலங்களில் மிகப்பெரிய எதிர்ப்பு கிளம்பியது. அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் சில மத அமைப்புகள் இந்த படத்திற்கு எதிராக போராட்டம் செய்ததன் காரணமாக தமிழகத்தில் இந்த படம் வெளியான தியேட்டர்களில் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் இந்த படத்திற்கு எதிர்ப்பு வலுத்து வருவதை அடுத்து இன்று முதல் ’தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் திரையிடப்படாது என தியேட்டர் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

பல்வேறு தரப்பின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் நாடு முழுவதும் கடந்த 5ஆம் தேதி வெளியான இந்த படம் தமிழ்நாட்டில் மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் மட்டும் திரையிடப்பட்டு வந்தது. இந்த நிலையில் போராட்டம் தீவிரமடைந்ததால் இன்று முதல் ’தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் திரையிடப்படாது என தியேட்டர் நிர்வாகங்கள் அறிவித்துள்ளன.

ஆனால் அதே நேரத்தில் கேரளாவில் இன்னும் ஒரு சில திரையரங்குகளில் இந்த படம் திரையிடப்பட்டு வருகிறது என்பதும், தமிழ்நாடு கேரளா மற்ற அனைத்து மாநிலங்களிலும் இந்த படம் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் திரையரங்குகளில் திரையிடப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

இரண்டு சிகரங்களுடன் நடித்த தமன்னா.. அடுத்தடுத்த நாட்களில் ரிலீஸ்..!

திரையுலகில் இரண்டு சிங்கங்களுடன் தமன்னா நடித்த இரண்டு படங்களும் அடுத்தடுத்த நாட்களில் ரிலீஸ் ஆகவுள்ளது.

தோனி எண்ட்ரியின்போது போடப்பட்ட பாடல் இதுதான்.. ஐஸ்வர்யா ராஜேஷ் பேட்டி..!

நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே மற்றும் மும்பை அணிகளுக்கு இடையை நடந்த போட்டியில் சென்னை அணி அபார வெற்றி பெற்றது என்பது அனைவரும் அறிந்ததே.

சிஎஸ்கே மேட்சை பார்க்க வந்த நயன்தாரா.. உடன் யார் யாரெல்லாம் இருக்காங்க பாருங்க..!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையே இன்று ஐபிஎல் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை

எனக்கு சம்மதம் தான், ஆனால்... திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்த ரசிகருக்கு பிக்பாஸ் ரேஷ்மா பதில்..!

பிக் பாஸ் போட்டியாளர் மற்றும் பாக்கியலட்சுமி சீரியல் நடிகை ரேஷ்மாவை திருமணம் செய்ய ரசிகர் ஒருவர் விருப்பம் தெரிவித்த நிலையில் எனக்கு விருப்பம் தான், ஆனால்.. என பதில் அளித்து இருப்பது பரபரப்பை

ஷாருக்கானின் 'ஜவான்' ரிலீஸ் தேதி மாற்றம்.. அதிகாரபூர்வ தகவல்..!

பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'ஜவான்'. இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மற்றும் கிராபிக்ஸ் பணிகள்