இன்று முதல் 7 நாட்கள்.. சூர்யாவின் 'கங்குவா' படப்பிடிப்பு குறித்த சூப்பர் அப்டேட்..!

  • IndiaGlitz, [Monday,September 18 2023]

சூர்யா நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் ‘கங்குவா’ என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்று முதல் 7 நாட்கள் நடைபெறும் ஒரு சின்ன ஷெட்யூல் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இன்று முதல் தொடங்கும் ‘கங்குவா’ படப்பிடிப்பில் பிளாஷ்பேக் போர் காட்சிகள் படமாக்கப்பட இருப்பதாகவும் இந்த காட்சியில் சூர்யா உட்பட ஒரு சிலர் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த படப்பிடிப்பு முடிந்த பின்னர் அடுத்த கட்டமாக பாங்காக்கில் 25 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற உள்ளதாகவும், இந்த படப்பிடிப்புடன் கிட்டத்தட்ட இறுதி கட்டத்தை நெருங்கி விடும் என்று கூறப்படுகிறது.

வரும் நவம்பர் மாதத்திற்குள் ஒட்டுமொத்த படப்பிடிப்பை முடிக்க இயக்குனர் சிறுத்தை சிவா திட்டமிட்டு இருப்பதாகவும் அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது

சூர்யா ஜோடியாக திஷா பதானி நடிக்கும் இந்த படத்தில் யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்தராஜ், ஜெகபதி பாபு, நடராஜன் சுப்பிரமணியம், பாபி தியோல் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். ரூ.350 கோடி பட்ஜெட்டில் உருவாகி வருவதாக கூறப்படுகிறது.

More News

மதத்தையும் நம்பிக்கையையும் மனசுல வை.. ரஜினிக்கு டேக் ஓகே செய்த ஐஸ்வர்யா.. வைரல் வீடியோ..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், அவரது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவான 'லால் சலாம்' என்ற படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் தற்போது இந்த படத்தின் டப்பிங் பணிகள்

வீலிங் செய்யும்போது ஏற்பட்ட விபரீதம்.. விபத்தில் சிக்கிய டிடிஎப் வாசன்..!

சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பிரபல யூடியூபர் தனது பைக்கில் சென்று கொண்டிருந்தபோது வீலிங் செய்ய முயற்சி செய்தார், அப்போது ஏற்பட்ட விபத்து காரணமாக அவர் படுகாயம் அடைந்து

தளபதி விஜய்யின் 'லியோ'.. அட்டகாசமான தெலுங்கு போஸ்டர்..!

தளபதி விஜய் நடித்த 'லியோ' திரைப்படம் வரும் அக்டோபர் 19ஆம் தேதி திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாக இருக்கும் நிலையில் இந்த படம் இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி

கோவை குலதெய்வம் கோவிலில் ரஜினியின் குடும்பம்.. என்ன விசேஷம்?

கோவையில் ரஜினிகாந்தின் மருமகன் விசாகனின் குலதெய்வ கோவிலுக்கு ரஜினிகாந்த் மற்றும் அவருடைய குடும்பத்தினர் சென்றுள்ள புகைப்படம் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

ஜெயம் ரவியின் 'JR30' திரைப்படத்தின் டைட்டில் என்ன? சூப்பர் அப்டேட் கொடுத்த தயாரிப்பு நிறுவனம்..!

நடிகர் ஜெயம் ரவி நடித்த 30வது திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த படத்தின் சூப்பர் அப்டேட் ஒன்றை  படத்தின் தயாரிப்பு நிறுவனம் தனது சமூக