சமந்தாவின் 'ரங்கஸ்தலம்' படம் திடீர் நிறுத்தம்: காரணம் என்ன தெரியுமா?

  • IndiaGlitz, [Wednesday,April 04 2018]

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் வேலைநிறுத்தம் காரணமாக கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக புதிய படங்கள் வெளியிடுவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் திரையரங்குகளில் வேறு வழியில்லாமல் ஏற்கனவே ரிலீசான படங்களையும், தெலுங்கில் ரிலீஸ் ஆன படங்களையும் திரையிடப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் சமீபத்தில் வெளியான சமந்தாவின் 'ரங்கஸ்தலம்' திரைப்படம் வெகுநாட்களுக்கு பின்னர் திரையரங்க உரிமையாளர்களுக்கு நல்ல வசூலை கொடுத்தது. மேலும் விரைவில் மகேஷ்பாபு உள்பட ஒருசில முன்னணி தெலுங்கு நடிகர்களின் படங்கள் வெளியாகவுள்ளதால் திரையரங்க உரிமையாளர்கள் மகிழ்ச்சியில் இருந்தனர்.

இந்த நிலையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கும் தமிழ் திரை உலகிற்கும் ஆதரவு அளிக்கும் வகையில் தெலுங்கு திரைப்படங்கள் எதுவும் ஏப்ரல் 8-ம்தேதி ஞாயிறு முதல் தமிழ் நாட்டில் வெளியிடுவதில்லை என்று தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது.

அதுமட்டுமின்றி ஏற்கனவே ரிலீஸ் செய்து வெற்றி நடை போட்டு வரும் ராம்சரன், சமந்தா நடித்த ‘ரங்கஸ்தலா’ படமும் ஞாயிறு முதல் நிறுத்தி வைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். திரை உலகின் நலனுக்காக தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் எடுத்துள்ள இந்த முடிவால் தமிழ் – தெலுங்கு திரைப்பட உலகிற்கும் இடையே நட்பு மேலும் வலுவாக உதவும் என்றும் கருதப்படுகிறது. அதே நேரத்தில் மீண்டும் திரையரங்க உரிமையாளர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

More News

சென்னையில் ஐபிஎல் போட்டிக்கு தடையா?

11வது ஐபிஎல் போட்டிகள் வரும் 7ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. சென்னையில் முதல் போட்டி வரும் 10ஆம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் இடையே நடைபெறவுள்ளது.

பிரபாகரனுடன் சீமான் போட்டோ எடுக்கவே இல்லை, எல்லாம் கிராபிக்ஸ்: வைகோ அதிர்ச்சி தகவல்

கைரேகை சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்தியதில் சுட்டுக்கொல்லப்பட்ட மாயக்காள் உள்ளிட்ட 16 பேரின் 98ஆம் ஆண்டு நினைவு தினம் நேற்று மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பெருங்காமநல்லூரில் அனுசரிக்கப்பட்டது

எல்லா புகழும் சூர்யாவுக்கே: பிரபல இயக்குனரின் டுவீட்

கடந்த பொங்கல் தினத்தில் வெளியான விக்னேஷ்சிவன் இயக்கத்தில் சூர்யா, கீர்த்தி சுரேஷ் நடித்த 'தானா சேர்ந்த கூட்டம்' திரைப்படம் சூர்யாவின் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே.

நோ பாலில் விக்கெட் எடுத்து கொண்டாடுபவர்: அப்ரிடிக்கு காம்பீர் பதிலடி

காஷ்மீரில் நடைபெற்று வரும் சம்பவங்கள் குறித்து சர்ச்சைக்குரிய டுவீட் பதிவு செய்த அஃபரிடிக்கு இந்திய அணி வீரர் காம்பீர் பதிலடி கொடுத்துள்ளார்.

காமெடியில் முடிந்த யுவன்சங்கர் ராஜாவின் கார் திருட்டு விவகாரம்

பிரபல இசையமைப்பாளர் யுவன்ஷங்கர்ராஜாவின் விலைமதிப்புள்ள ஆடி கார் நேற்று திருடு போனது என்பது குறித்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.