அடுத்த வாரத்தில் இருந்து சும்மா வெடிக்கும் பட்டாசுகள்:  'வாரிசு' படக்குழுவின் திட்டம் இதுதான்!

தளபதி விஜய் நடித்த ‘வாரிசு’ திரைப்படத்தின் சூப்பர் ஸ்டில் ஒன்று கடந்த தீபாவளி அன்று வெளியானது என்பதும் அந்த ஸ்டில்லில் அடுத்த வாரம் முதல் பட்டாசு வெடிக்கும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் அடுத்த வாரத்திலிருந்து ‘வாரிசு’ படக்குழுவினர் என்னென்ன புரமோஷன் திட்டங்களை செய்துள்ளனர் என்பது குறித்த தகவல் தற்போது கசிந்துள்ளது.

முதல்கட்டமாக ‘வாரிசு’ திரைப்படத்தின் முதல் பாடலை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இந்த பாடலை விஜய்யே பாடியுள்ளார் என்பது தனி சிறப்பு. தமன் இசையில் விஜய் பாடும் இந்த பாடலை எதிர்நோக்கி அவரது கோடிக்கணக்கான ரசிகர்கள் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டமாக ‘வாரிசு’ திரைப்படத்தில் நடித்த நடிகர் நடிகைகளின் பேட்டிகள் சமூக ஊடகங்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் இடம் பெற உள்ளன. ஏற்கனவே ‘வாரிசு’ இயக்குனர் வம்சி பேட்டி முன்னணி ஊடகம் ஒன்றில் வெளியாகி உள்ளது என்பது தெரிந்தது.

அதன் பின்னர் இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய அளவில் பாடல்கள் ரிலீஸ் விழாவை நடத்த திட்டமிட்டுள்ளனர். தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் ஒரே விழாவாக சென்னையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதனை அடுத்து படக்குழுவினர் துபாய் சென்று மிகப்பெரிய அளவும் புரமோஷன் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல் ஹைதராபாத்திலும் ஒரு பெரிய நடத்தப்படவுள்ளது.

இதனை அடுத்து ‘வாரிசு’ திரைப்படத்தின் டிரைலர் பட ரிலீஸ் க்கு ஒரு சில நாட்களுக்கு முன்னர் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. அதுமட்டுமின்றி சோசியல் மீடியா மற்றும் தொலைக்காட்சிகளிலும் இந்த படத்தின் புரமோஷன் மிகப்பெரிய அளவில் நடத்தவும் வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

உண்மையிலேயே அடுத்த வாரம் முதல் பட்டாசு வெடிக்கும் அளவுக்கு விஜய் ரசிகர்களுக்கு ‘வாரிசு’ படத்தின் அப்டேட்டுக்கள் தொடர்ச்சியாக வெளிவந்து கொண்டிருக்கும் என்பதால் விஜய் ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.

விஜய், ராஷ்மிகா மந்தனா பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஷாம், யோகிபாபு, பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், சங்கீதா, சம்யுக்தா, உள்பட பலர் நடித்து வரும் இந்த படம் கார்த்திக் பழனி ஒளிப்பதிவில், பிரவிண் கே.எல் படத்தொகுப்பில் உருவாகி வருகிறது. தில் ராஜூ தயாரிப்பில் வம்சி இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்த படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகி வருகிறது.