புல்வாமா மட்டுமின்றி காந்தகாருக்கும் சேர்த்து பழிதீர்த்த இந்தியா!
- IndiaGlitz, [Tuesday,February 26 2019]
புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக இன்று அதிகாலை இந்திய விமானப்படை, பாகிஸ்தானுக்குள் நுழைந்து தீவிரவாதிகளின் முகாம்களை துல்லியமாக தாக்கியதோடு, ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் முக்கியமானவனான மவுலானா யூசூப் அசார் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இவன் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் தலைவனான மசூர் அசாரின் மைத்துனன் ஆவான்.
இந்த யூசுப் அசார் தான் கடந்த 1999ம் ஆண்டு டிசம்பர் 24ம் தேதி, காத்மாண்ட் நகரில் இருந்து டெல்லி நோக்கி வந்து கொண்டிருந்த இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தை கடத்தியவன். கடத்திய விமானத்தை விட வேண்டுமானால் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசார் மற்றும் 2 தீவிரவாதிகளை விட வேண்டும் என்று தீவிரவாதிகள் கூறினர் என்பதும் இதன்படி இருவரையும் இந்திய அரசு விடுவித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது
எனவே இன்றைய சர்ஜிக்கல் அட்டாக்கில் மவுலானா யூசுப் அசார் கொல்லப்பட்டது புல்வாமா தாக்குதலுக்கு மட்டுமின்றி காந்தகார் கடத்தலுக்கும் சேர்த்து இந்திய விமானப்படை பழிவாங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது