2021 இல் என்ன நடக்கும்??? கொரோனாவை கணித்த பாபா வங்காவின் கருத்து என்ன???
Send us your feedback to audioarticles@vaarta.com
ஒட்டுமொத்த உலகத்திற்கும் 2020 ஆம் ஆண்டு ஒரு கெடுங்காலமாக மாறிவிட்டது. கொரோனா பரவல், பொருளாதார வீழ்ச்சி, வேலை இழப்பு, வறுமை என ஒட்டுமொத்த உலகத்திற்கும் இந்த ஆண்டு நெருக்கடியாக அமைந்தது. இந்நிலைமையை பல ஆண்டுகளுக்கு முன்பே பாபா வங்கா எனும் பெண்மணி கணித்து கூறி இருந்தார். இதுகுறித்த செய்திகளும் கொரோனா நேரத்தில் மிகப் பரவலாகச் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வந்தன.
அதாவது 2020 ஆம் ஆண்டில் ஒரு பெரிய கொடிய நோய் ஒட்டுமொத்த உலகத்தையும் ஆட்டிப்படைக்கும் என பாபா வங்கா இறப்பதற்கு முன்பே தெரிவித்து இருந்தாராம். அதேபோல அமெரிக்காவின் 44 ஆவது அதிபர் ஒரு கறுப்பராக தேர்ந்தெடுக்கப் படுவார் என்றும் அமெரிக்காவின் வர்த்தகக் கட்டிடத்தை தீவிரவாதிகள் நொறுக்குவர் என்றும் பாபா கூறி இருந்தாராம். பல்கேரியா நாட்டைச் சேர்ந்த இவர் கடந்த 1996 ஆவது ஆண்டில் தன்னுடைய 85 ஆவது வயதில் உயிரிழந்து இருக்கிறார். அதோடு அவருடைய 12 ஆவது வயதிலேயே பார்வைக் குறைபாடு ஏற்பட்டு தன்னுடைய வாழ்நாள் முழுவதும் குருட்டுத் தன்மையோடே வாழ்க்கையை கழித்து இருக்கிறார்.
இந்நிலையில் எதிர்காலத்தை கணித்துக் கூறும் திறமை இவரிடம் காணப்பட்டதாக நம்பப்படுகிறது. இதனால் அவருடைய அனைத்துக் கருத்துகளும் பதிவு செய்து வைக்கப்பட்டு இருக்கின்றன. இதில் 80% பெரும்பாலான கணிப்புகள் பலித்தும் விடுகின்றன. அதோடு 2020 பற்றிய பாபா வங்காவின் அனைத்து கணிப்புகளும் நடந்தேறி விட்டன. இதனால் 2021 ஐ பற்றி பாபா என்ன சொல்லி இருக்கிறார் என்பதே பலரின் எதிர்ப்பார்ப்பாகத் தற்போது மாறி இருக்கிறது.
தற்போது 2021 ஆம் ஆண்டில் இந்த உலகம் சில பேரழிவுகளை சந்திக்க இருக்கிறது என பாபா வங்கா கணித்து கூறியதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதோடு இந்த ஆண்டில் புற்று நோய்க்கான தீர்வு உருவாகும் எனவும் அவர் கூறியதாகத் தகவல் கூறப்படுகிறது. இந்தக் கணிப்பில் இன்னொரு அதிர்ச்சி தகவலும் இருக்கிறது. அமெரிக்காவின் 45 ஆவது அதிபராக இருந்தவருக்கு 2021 ஒரு கெடுங்காலமாக அமையும் என்றும் பார்வைக் குறைபாடு, காது கேளாமல் போவது அல்லது மூளைப் பிரச்சனை போன்ற ஏதேனும் ஒரு மர்மநோயால் அவர் தாக்கப்படுவார் என்றும் கூறப்பட்டு உள்ளது.
மேலும் ஐரோப்பா முழுவதும் கடும் பொருளாதார வீழ்ச்சி ஏற்படும் என்றும் இந்நாடுகளில் தீவிரவாதிகளின் சதி வேலைகள் நடக்கும் என்றும் கூறப்பட்டு உள்ளது. அடுத்து ரஷ்ய அதிபர் புதின் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கும். அடுத்த 200 ஆண்டுகளில் மனிதர்கள் ஏலியன்களுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொள்வார்கள். இந்த ஆண்டில் உலகத் தோற்றத்திற்கான அறிவியல் காரணிகள் முழுமையாக வெளிவரும். மேலும் வேறு உலகங்களிலுள்ள தங்களின் ஆன்மீக உடன் பிறப்புகளுடன் சிலர் தொடர்பு கொள்வர்.
அதோடு ஒரு வலிமையான டிராகன் ஒட்டுமொத்த மனித குலத்தையே கைப்பற்றும். 3 ராட்சதர்கள் ஒன்று கூடுவர். அதோடு சில பேரிடம் சிவப்பு பணம் இருப்பதை தான் பார்த்தாகவும் பாபா வங்கா கணித்து உள்ளார். இந்தத் தகவல்கள் அனைத்தும் ஒரு புராணக் கதையைப் போல தோன்றினாலும் பாபா வங்காவின் பெரும்பாலான கணிப்புகள் நிஜமாகி இருக்கின்றன. இந்நிலையில் 2021 ஆம் ஆண்டிலும் இந்த உலகம் பல பேரழிவுகளை சந்திக்கும் என பாபா கூறி இருப்பது குறித்து பலரும் அச்சம் தெரிவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments