சாத்தான்குளம் சம்பவம் எதிரொலி: பிரெண்ட்ஸ் ஆப் போலீசுக்கு தடை
Send us your feedback to audioarticles@vaarta.com
சாத்தான்குளம் செல்போன் வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரையும் விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்ற காவல்துறை அதிகாரிகள் அவர்களை விடிய விடிய அடித்துக் கொடுமைப்படுத்தி கொலை செய்ததாக எழுந்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
இது குறித்த செய்திகள் தேசிய ஊடகங்களிலும் சர்வதேச ஊடகங்களிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து மதுரை ஐகோர்ட் இந்த வழக்கை தாமாகவே முன் நின்று பதிவு செய்தது. மதுரை ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் சிபிசிஐடி போலீசார் இந்த வழக்கை கையில் எடுத்து அதிரடியாக ஒரு இன்ஸ்பெக்டர், 2 சப் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் இரண்டு காவலர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் தந்தை மகன் கொலை வழக்கில் காவல்துறையினர் மட்டுமின்றி பிரண்ட்ஸ் ஆப் போலீஸ்-இல் உள்ள சில இளைஞர்களும் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது. இதனையடுத்து அவர்களையும் கைது செய்து விசாரணை செய்ய வேண்டும் என்ற குரல் சமூகவலைதளத்தில் வலுத்து வந்தது. மேலும் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் என்ற அமைப்பையே கலைக்க வேண்டுமென்று என்றும் வலியுறுத்தப்பட்டது
இந்த நிலையில் தமிழக காவல்துறையில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸை பயன்படுத்த வேண்டாம் என தமிழக டிஜிபி அறிவுறுத்தல் செய்ததை அடுத்து அதிரடியாக இன்று காலை விழுப்புரம் மாவட்ட எஸ்பி ராதாகிருஷ்ணன் அவர்கள் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ்க்கு தடை விதிப்பதாக அறிவித்தார். மேலும் விழுப்புரம் மாவட்டத்தில் பிரெண்ட்ஸ் ஆப் போலீசை சேர்ந்தவர்களை சமூக பணிக்கு மட்டுமே பயன்படுத்தபடுவார்கள் என்றும் அவர் தெரிவித்திருந்தார்
விழுப்புரம் மாவட்ட எஸ்பியை அடுத்து அரியலூர், பெரம்பலூர், கரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் உள்ள பிரண்ட்ஸ் போலீசுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் திருச்சி மாவட்ட டிஐஜி ஆனி விஜயா அவர்களும் பிரெண்ட்ஸ் ஆப் போலீசுக்கு தடை என்ற உத்தரவு பிறப்பித்துள்ளார்
எனவே சாத்தான்குளம் சம்பவம் எதிரொலியாக கிட்டத்தட்ட தமிழகம் முழுவதும் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ்க்கு தடை விதிக்கப்பட்டு வருவது பொது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments