இளையராஜாவின் பாடல்களை பாடி இறுதியஞ்சலி செலுத்திய நண்பர்கள்: நெகிழ வைக்கும் வீடியோ
Send us your feedback to audioarticles@vaarta.com
இசைஞானி இளையராஜாவுக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உலகமெங்கும் உண்டு என்பது அறிந்ததே. அந்தவகையில் மலேசியாவை சேர்ந்த இசைஞானியின் ரசிகர் ஒருவரின் மறைவிற்கு அவரது நண்பர்கள் இளையராஜாவின் பாடல்களை பாடி இறுதி அஞ்சலி செலுத்திய வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
மலேசியாவைச் சேர்ந்த இசைஞானி ரசிகர் ஒருவர் தனது நண்பர்களிடம் தான் இறந்த பிறகு இளையராஜாவின் பாடல்களை பாடிய தனது இறுதி சடங்கு நடத்த வேண்டும் என்று தனது கடைசி ஆசையை கூறியுள்ளார். இந்த நிலையில் அவர் சில தினங்களுக்கு முன் காலமான நிலையில் அவரது ஆசையை பூர்த்தி செய்யும் வகையில் இளையராஜாவின் பாடலை பாடி அவருக்கு நண்பர்கள் அஞ்சலி செலுத்தினர்.
‘இளமை என்னும் பூங்காற்று’ என்ற இசைஞானியின் பாடலை அவரது நண்பர்கள் கொரோனா வைரஸ் விதிமுறைகளைக் கடைப்பிடித்து பாட, நண்பர்களின் ஒருவர் இசை அமைத்தார். இதனை அடுத்து அவருடைய உறவினர்கள் வரிசையாக வந்து அஞ்சலி செலுத்தும் காட்சி அந்த வீடியோவில் உள்ளன. இந்த நெகிழவைக்கும் வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இசைஞானி இளையராஜாவின் பாடலோடு நண்பனுக்கு இறுதியாக மரியாதை செலுத்திய நண்பர்கள். #ilayaraja
— Sathishwaran PRO (@SathishwaranPRO) May 28, 2021
❤️?? pic.twitter.com/S2QFNDjK2S
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com