பெண்ணாக மாறி நண்பனை திருமணம் செய்தவர் வீதிக்கு வந்த துயரம்!

  • IndiaGlitz, [Saturday,December 28 2019]

நண்பனின் ஆசையை பூர்த்தி செய்ய பெண்ணாக மாறி நண்பனையே திருமணம் செய்து கொண்ட கல்லூரி மாணவர் ஒருவர் தற்போது திரிசங்கு நிலையில் தவித்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

தெலுங்கானா மாநிலத்தில் அபிஷேக், சந்தோஷ் ஆகிய இருவரும் தனியார் கல்லூரியில் ஒரே வகுப்பில் படித்து வந்தனர். இருவரும் ஆரம்பத்தில் நெருக்கமான நண்பர்களாக இருந்தனர். இந்த நிலையில் அபிஷேக்கின் நடை உடை பாவனையில் பெண் தன்மை அதிகமாக இருந்ததை கவனித்த சந்தோஷ், அபிஷேக்கை நட்பையும் தாண்டி ஒரு கட்டத்தில் காதலிக்க தொடங்கினார்

இதனை அடுத்து தன்னுடைய காதலை அபிஷேக்கிடம் தெரிவிக்க முதலில் மறுத்து அபிஷேக் அதன்பின் ஒப்புக்கொண்டதாக தெரிகிறது. ஒரு கட்டத்தில் இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்தபோது அபிஷேக்கை பெண்ணாக மாற பாலின அறுவை சிகிச்சை செய்து கொள்ள வேண்டும் என்று சந்தோஷ் வற்புறுத்தியுள்ளார்.

நண்பனின் ஆசையை நிறைவேற்றுவதற்காக பாலின அறுவை சிகிச்சைக்கு சம்மதித்த அபிஷேக், அறுவை சிகிச்சை செய்து பெண்ணாக மாறினார். அதன்பின் இருவரும் தனி வீடு எடுத்து கணவன் மனைவி போல் வாழ்ந்தனர். ஆனால் இந்த வாழ்க்கை சந்தோஷுக்கு சில நாட்களிலேயே கசந்தது. அபிஷேக்கை வெறுக்க தொடங்கி அவர், ஒரு கட்டத்தில் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார்

நண்பனின் ஆசையை நிறைவேற்றுவதற்காக பாலின அறுவை சிகிச்சை செய்து பெண்ணாக மாறிய அபிஷேக் தற்போது மீண்டும் ஆணாக மாற முடியாமல், பெண்ணாகவே தொடர்ந்து வாழவும் விருப்பம் இல்லாமல் தவித்து வருகிறார். இது குறித்து அபிஷேக் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளதாகவும் காவல்துறையினர் இது குறித்து விசாரணை செய்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது